உன் பெயரை உச்சரித்தபடி

நிச்சையம் உனக்கு
நினைவிருக்கும்

எனக்கு முதன்முதலாக
நீ அளித்த பரிசு

என் கைக்கு ஏற்றார்
போல்

ஒரு கைகடிகாராம்

நீரில் நனைந்தாலும்

ஒன்றும் ஆகாது என்று

நீ சொன்னது நினைவு
இருந்தும்

புதிதாக என் பைக்குள்
குடிபுகுந்தது

ஒரு நெகிழிப்பையும்
அன்று முதல்

நினைவிருக்கின்றதா ஒரு
மழைநாளில்

அந்த நெகிழிப் பையெடுத்து
கடிகாரத்தை

பத்திரபடுத்தும் போது

பைகுள் ஒரு பைய்யா
எதற்கு

என்று நீ கேட்டது

குளிக்கும் போது மட்டும்
இல்லை

அடுத்தவர் கைபட்டும்

மழைதுளிப்பட்டும் உன்
கைத்தடம்

அழிந்து விடக்கூடாது
அல்லவா

அதற்காக தான் என்று
சொன்னது

இதயத்தின் லப்டப்பும்
கடிகாரத்தின் டிக்டிக்கும்

உன் பெயரையே உச்சரிக்க

ஏன் என்று தெரியாமலே

நீயா நானா போட்டியில்
இருவரும்

நாம் இருவரும் ஒருவர்
என்பதை மறந்து

எதுவும் மாறவில்லை

நான் ஒருபக்கம் நீ ஒருபக்கம்

தொடர்கின்றது வெளியில்
டிக்டிக்கும்

உள்ளே லப்டப்பும் உன்
பெயரை உச்சரித்தபடி

எழுதியவர் : நா.சேகர் (15-Jan-19, 10:55 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 698

மேலே