காதல்

இளங்காளை நான், அழகு கன்னி நீ
தனிமையில் இருக்கின்றோம் நாம் இங்கு
தனிமையில் காதலனும் காதலியாய்
காதலர் நமக்கு இவ்விரவில் சாட்சி
வான்நிலவும் தாரகைகளும்தான்
நீ அறிவாயடி எந்தன் காதலியே
தனிமையில் இனிமைக்கான உணர்வுகள்
உறுத்தினாலும் நானறிவேனடி பெண்ணே
மணமாகும் முன்னே அது தவறு என்று
உன் உணர்வுகள் ஒப்பாது நீ நான் கிட்ட வர கிட்ட வர
எட்டி எட்டி போகிறாய் ......................
உந்தன் காதலன் நான் உன்னை என் உயிரினும்
மேலாய் நினைப்பவனடி நான்
நம் காதலை கருத்தில் கொண்டு அதற்கு
நித்தம் நித்தம் தலைவணங்குபவன் நான்
இளங்காளையும் அழகு கன்னிகையும்
தனிமையில் இருந்தால் பஞ்சும், தீயும் போல என்பர்
பெண்ணே, நம் காதல் முதற்கண்
நம்மிருவருக்கும் ஒருவர் மீது ஒருவற்கு
உண்டான பேரன்பையே புலப்படுத்த
அதை நன்குணர்ந்த நான் ஒருபோதும்
அத்துமீறி உன்னை தொட்டுவிடமாட்டேனடி
நாமிருவரிடையே காமம் ஓர் வேள்வித்தீயாய்
வந்து நம்மைத் தீண்டுமாடி நம் திருமண
வைபவம் முடிந்தபின்னே .......அதுவரையிலும்
நம் காதல் மீதாணையடி பெண்ணே
என் உடலின் நகம் கூட உன்னைத் தீண்டாதடி பெண்ணே
தன்மையில் காதலர் நாம் இருவர் அதுவரை
தனித்திருந்தாலும் அந்த 'களவுறவில்
ஒரு போதும் காமத்திற்கு இடமிராதடி பெண்ணே
இது நம் காதல் மீது சத்யமடி ...............இனி
பயத்தை எல்லாம்மறந்து விடு வந்து
என் முன்னே அமர்ந்திடுவாய் ஓர்
காதல் கீதம் பாடிடுவாயே எனக்காய்
நாம் தனிமையில் இருந்தாலும் ஒரு போதும்

எழுதியவர் : வாசவன்-t (16-Jan-19, 2:26 pm)
Tanglish : kaadhal
பார்வை : 331

மேலே