நிலவு

நீல வானமெனும் தடாகத்தில்
பூத்த ஒரே ஒரு வெண்தாமரை
தன்னொளி பரப்பி ஒளிருதே
மண்ணிற்கு இரவில் முளைத்த
'பகலவனாய்', அந்த பகலவனின்
ஒளி பெற்று , ஆயின் வெப்பத்தில்
நம்மை வதைக்காது குளிர்தரும்
மண்ணிற்கே இயற்கை தந்த
மாபெரும் 'குளிர் சாதனமாய்
தாயின் மடியில் தாலாட்டு கேட்கும்
குழந்தைக்கு 'சந்திர மாமாவாய்'
காதலருக்கு நண்பனாய், தூதுவனாய்
வளர்ந்தும், தேய்ந்தும், மீண்டும் வளரும்
வளர் ஒளி வெண்தாமரையே நிலவே
என் மனதில் நீ எப்போதும் நிலைத்துவிட்ட
பூரண பௌர்ணமி நிலவு, என் காதலியைப்போல.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Jan-19, 5:37 pm)
Tanglish : nilavu
பார்வை : 318

மேலே