வாடட்டும் இவன் இதயம்

தை மாத சதுர்த்தியில் நீள் தெருவில் அமர்ந்திந்தேன்
பளிச்சென்று மஞ்சள் பூசி பைங்கிளி வருவாளென்று

சல சல என தெருவெங்கும் பசும் சாணம் தெளித்தனர்
பள பளக்கும் அழகுடன் பல வகை மங்கையரெல்லாம்

வகை வகையான துடைப்பத்துடன் வாசலை கூட்டினர்
நிறைவான நிறங்களில் நிறைந்த கோலமிட்டனர்

அடர்ந்த கூட்டம்மதில் அவளைக் காண முயற்சித்தேன்
முதியவளின் பின்னால் அவள் முயல்போல் நின்றிருந் தால்

அன்றோர் நாள் அவளை நான் ஆலயத்தில் பார்த்திருந்தேன்
அந்த நாள் முதல் அவளை நான் ஆழ்மனதில் நிறுத்தி வைத்தேன்

எந்த நாள் முதல் நான் அவளை என தாக்கி கொள்வேன் என்று
எண்ணி எண்ணி மனதுக்குள்ளே எரிமலையாய் இருக்கின்றேன்

அந்த வண்ணக்கிளி இந்த வாலிபனின் வாஞ்சையை ஏற்ப்பாளோ - இல்லை
வாடட்டும் இவன் இதயம் என்று இடர்பட வைப்பாளோ.
- - நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (17-Jan-19, 9:39 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 240

மேலே