ஒளவை சொன்ன கல்லுத் தூணும் இரும்புத் தூணும்

தாங்க முடியாத பாரத்தைச் சுமக்க வேண்டிய நிலை வந்தால் இரும்பினால் செய்யப்பட்ட தூண் வளைந்து போகும். யாராவது அதன் பாரத்தைக் குறைத்து உதவி திரும்பவும் நேராக்கிவிட முடியும். ஆனால் தன்னால் சுமக்க முடியாத பாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை வந்தால் கல்லினால் செதுக்கப்பட்ட தூண் அந்தக் கணமே பிளந்து வீழ்ந்து தன்னை அழித்துக் கொள்ளுமே அல்லாது வளைந்து கொடுத்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்காது.
அது போல தங்களால் தாங்கிக் கொள்ள முடியாத அவமானம் ஏற்பட்டால் அந்த நிமிடமே உயிரை விடத் தயாராக இருப்பவர்கள் எதிரிகளையோ மற்றவர்களையோ பணிந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்கமாட்டார்கள்.

உற்ற இடத்தில் உயிர்வழங்குந் தன்மையோர்
பற்றலரைக் கண்டாற் பணிவரோ-கற்றூண்
பிளந்திறுவ தல்லால் பெரும்பாரந் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான்.

( வாக்குண்டாம் – செய்யுள் 6 ) இரா.ஞானசம்பந்தன்.

எழுதியவர் : (17-Jan-19, 10:51 am)
பார்வை : 51

மேலே