வேண்டாம் வேண்டாம்

கொஞ்சம் என்று சுவைத்து
பார்க்க சொல்ல

கொஞ்சம்தானே என்று
சுவைத்தேன்

அத்தோடு நிற்குமென
நினைத்தேன் நிற்கவில்லை

இன்னும் கொஞ்சம் இன்னும்
கொஞ்சம்

என எனைக் கொஞ்ச

கொஞ்சங் கொஞ்சமாய் கூடிப்
போனது அளவு

வேண்டாம் வேண்டாம்முனூ
சொந்தமெல்லாம் கெஞ்ச

நஞ்சாகிப் போனது அவர்கள்
வார்த்தையெல்லாம்

போதும் என்று எல்லாம் விலக

என்னால் மட்டும் போதுமென
சொல்ல முடியாது போக

மிச்சம் மீதியென்று என்னிடம்
எதுவுமில்லை

காலியான புட்டியாய்
தெருஓரத்தில்

அதற்கு கூட விலையுண்டு
எனக்கு?

எழுதியவர் : நா.சேகர் (18-Jan-19, 10:32 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 85

மேலே