நட்பில் ஒரு காதல் பிரிவு

நம் உறவை சூறையாடிய என் கோபம் நகை என்று பேசியதற்கு பழி தீர்கின்றன உன் கோபம்
எத்தனை முறை மன்னிப்பு கேட்டும் ஏற்க மறுக்கிறாய்
யாரோ போல உன்னை கடந்து செல்லும் இந்நிமிடத்தில் மண்ணில் நரகம் காட்டுகிறாய்
மகிழ்ந்திருந்த காலங்களை மறந்தேன் என்கிறாய்
என்னை மரணம் நோக்கி தள்ளத்தானா?

சிரித்திருந்த காலங்கள் சிலவே என்கிறாய்
என் கண்ணீர் கடலில் கால் நனைக்கத்தானா ? அன்று
உலகம் ஊக்கமளித்து............
நடக்கையிலும் பறந்திருந்த பாதங்கள்
உறக்கம் இல்லாமல் இனித்திருந்த இரவுகள்
உன் குறுந்செய்தி பார்த்து கழித்திருந்த காலங்கள்
உன் சிறு இதழ் சிரிப்பில் மரணித்த என் கவலைகள்
எவர் இருந்தும் உன்னை மட்டும் தேடிய இதயம்
இன்று
நீ சுடுசொல் பேசி கடுமுகம் காட்ட பதறுகிறேன்
உன் முகம் பார்க்க முடியாமல் திணறுகிறேன்
என் தவறை எண்ணி எண்ணி இறக்கிறேன்
என்று முடியுமோ இந்த மனப்போர்
தோற்பதற்கு நான் தயார்,
ஏற்பதற்கு நீ தயங்குகிறாய்
ஒரு வரி வார்த்தைக்கு என்னைத் தூக்கி எறிகிறாய்
நீ தூரப் போகும் முன்னே
நான் விட்டு விலகி விடுகின்றேன்
கண்ணீருடன்~~

எழுதியவர் : Moonchanta (19-Jan-19, 12:22 pm)
சேர்த்தது : தமிழ்தாரணி
பார்வை : 1140

மேலே