காதல்-வீணையடி நீ எனக்கு

நல்லதோர் வீணையைக் கண்டெடுத்ததேனோ நான்
என்றல்லவா நினைத்தேனடி நான் உன்னை
முதல் முதலாய் கண்டபோது - நீ ஒரு வீணையாய்
தோற்றமளிக்க, உந்தன் பார்வை ....புருவங்கள் விரிய
இமைகள் மூடி திறக்க வீணை மெல்ல சுருதி சேர்ப்பதுபோல்
என்னுள் ஒரு பிரமை......இப்போது நீ திறந்தும் திறக்காத
உந்தன் இதழால் ஒரு புன்னகை தந்தாய் , அதில் கண்ணே
அந்திப்பொழுதில் உன்னை கண்ட நான் நாட்டகுறுஞ்சி ராகம்
இசைப்பதுபோல் கேட்டேனடி...இதோ தோகை மயிலாய்
நீ ஆடிவருகிறாய் , வீணை நீ கரகரப்ரியா இசைப்பதுபோல்
என் காதில் இசைக்கின்றாய் ...................

வீணையடி நீ எனக்கு,, உந்தன் சலனங்களில் நான்
காண்கின்றேன் , கேட்கின்றேன் நீ எழுப்பும்
வீணையின் இசை , நம்மை சேர்க்கும்
காதல் ஜீவா இசை என்பேனே.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Jan-19, 6:34 pm)
பார்வை : 138

மேலே