என் வாழ்வின் ஒளியாய் நீ மட்டும்

எங்கும் இருள்
சூழ்ந்த

யாரும் எளிதாய்
ஊடுருவ முடியா

அடர்ந்த காடாய்
என் மனம்

எப்படி அதில் நீ
நுழைந்தாய்!

உன் வரவால்
எனக்குள்ளே

ஒளிப்பிரவாகம்

இப்பொழுதுதான்

என்னையே நான்
பார்கின்றேன்

இவ்வளவு நாள்
எங்கே போனாய்

ஒளிமாயமானாது
வாழ்க்கை

என்று புரிய நான்
காத்திருந்தேனா

இல்லை காக்க
வைக்கபட்டேனா?

இல்லை எனக்கு
இது ஒரு வாய்ப்பா?

எப்படியோ இருந்து
விட்டுபோகட்டும்

என் வாழ்வின்

ஒளியாய் நீ மட்டும்
இரு

அந்த ஒளியில்
என் பயணம்

தொடரட்டும்

எழுதியவர் : நா.சேகர் (20-Jan-19, 9:10 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 857

மேலே