தெய்வங்கள் பேரால் உயிர்பலி ------------வள்ளலார் சொல்லும் அறிவுரை------தைப்பூசம்

வள்ளலார்

வி.ராம்ஜி

வள்ளலார் பொன்மொழிகள்

வடலூர் வள்ளலார் கோயிலில் நாளை தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த நன்னாளில், வள்ளார் நமக்கு அருளிய பொன்மொழிகளை அசைபோடுவோம்.

* கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் !

* ஏழைகளின் பசி தவிர்த்தலாகிய ஜீவ காருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவு கோல்!

* சிறு தெய்வ வழிபாடு கூடாது. அந்தத் தெய்வங்களின் பேரால் உயிர்பலி செய்யக் கூடாது.

* புலால் உண்ணக் கூடாது!

* சாதி சமய மதம் முதலான வேறுபாடுகள் கூடாது!

* எவ்வுயிரையும் தம் உயிர் போல் எண்ணும் ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமையைக் கடைப் பிடிக்க வேண்டும்!

* புராணங்களும் சாத்திரங்களும் முடிவான உண்மையைத் தெரிவிக்க
மாட்டாது !

* இறந்தவரை புதைக்க வேண்டும். எரிக்கக் கூடாது!

* கருமாதி, திதி முதலிய சடங்குகள் வேண்டாம்!

* கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் கூடாது! மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்தல் கூடாது !

* எதிலும் பொது நோக்கம் வேண்டும் .!

* கடவுள் ஒருவரே! அவர் அருட்பெருஞ் ஜோதியாக உள்ளார் !

* கடவுள் உருவமாக இல்லை,அருவமாகவும் இல்லை,உரு அருவமாக உள்ளார்!

* கடவுள் ஒன்றும் இலார், இரண்டும் அலார் ,ஒன்றும் இரண்டுமானார் ! அன்றும் உள்ளார். இன்றும் உள்ளார். என்றும் உள்ளார் தமக்கோர் ஆதியில்லார்,அந்தமில்லார் அவரே அருட்பெருஞ்ஜோதியர்!

எல்லாம் தானுடையதுவாய் எல்லாம் வல்லதுவாய், எல்லாம் தானானதுவாய் எல்லாம் தானலதாய்ச் சொல்லாலும்,பொருளாலும் தோன்றும் அறிவாலும் துணிந்து அளக்க முடியாததாய் ,அணுவும் செல்லாத நிலைகளினுஞ் செல்லுவதாய் விளங்குவது அருட்பெருஞ்ஜோதியாகும்!

எழுதியவர் : (21-Jan-19, 5:17 am)
பார்வை : 165

மேலே