வெறுமை

1.
மௌனமே மாறாத ஒன்று
வாழ்க்கை நிலையானதன்று.
2.
மலை உச்சியில் நிலா
சிவன் தலையில் கங்கை
என்னுள் குண்டலினி சக்தி.
3.
சித்தர்கள் மௌனம் கலைந்தது
பறவைகள் இடம் பெயர்ந்தன
பௌர்ணமி கிரிவலம் நெரிசல்.
4.
குரு இல்லை
சீடர்கள் இல்லை
வெறுமையாய் குகை.
5.
குரு ஆற்றுகிறார் நீண்ட உரை
சீடர்கள் மௌனமாய் கேட்கிறார்கள்
அரசமரத்தில் கிளிகள் கீச்கீச்.

எழுதியவர் : ந க துறைவன் (21-Jan-19, 11:09 am)
சேர்த்தது : Thuraivan N G
Tanglish : verumai
பார்வை : 73

மேலே