மகளின் பிரிவில்

பூ போல பூத்து
புது வாசம் தந்தாய்
நீங்காத நேசம்
நெஞ்சோடு என்றும்
ஏங்காத நேரம் என்றாவது
உண்டா
உன்னாலே நானே உருமாறி போனேன்
எந்நாளும் நீயே எனக்காக
வேண்டி
கேட்காத கடவுள் இவ்வுலகில்
உண்டா
உயிராக உலவ நீ அருகில் வேண்டும்
உனை நினைத்தாலே போதும் இனிதாக மாறும் என் ஆயுள் முழுதும்

மழைக்காக மேகம் கரு சுமக்கும் போது
உனக்காக நானும்...
கருவில் வாய்ப்பில்லை நெஞ்சினில் என்றும்.
பெண்ணாக பிறந்தாயே
என் கண் என ஆனாயே

அலைகடல் நடுவே துடுப்பில்லா படகாய் தள்ளாடி நானும்
திசை மாறி போனேன்
ஏக்கங்கள் தீர வரும் வார்த்தைகள் போதும் உன் திருவாய் மலர்ந்திட காத்திருப்பேன் நானும்
உறவுக்குள் தானே உண்டான பந்தம் இல்லாமல் போகுமோ

விடை அறிந்தும் ஏனோ விடுகதையாய்
நானும்
நிலவினை போல் அலைகிறேன் தனியே
நீள் துயில் காணும் முன்னே
நின் முகம் காண வேண்டும்

உன் செவ்விதழ் மலர்ந்து
அழைக்கும்
அப்பா எனும்
வார்த்தை போதும்
ஏக்கத்தில் என்றும்...

எழுதியவர் : த. பசுபதி (22-Jan-19, 10:31 am)
சேர்த்தது : பசுபதி
Tanglish : makalin PIRIVIL
பார்வை : 38

மேலே