அறிவுப் பெண்ணே

அறிவுப் பெண்ணே கேட்டுக்கொள்
அனைத்துப் பேரையும் நம்பாதே
அழகாய் உன்னைப் புகழ்ந்தாலும்
அறிவால் அதனை ஆராயி
உடலைப் புணர ஒரு கூட்டம்
உத்தமர் போலே அலையுது பார்
இளம் விதை என்றாலும் விடுவதில்லை
முதிர்ந்த பிணம் என்றாலும் விடுவதில்லை
பெண் சதைக்குத் தானே குறிவைத்து
பிணந்தின்னி போலே சுற்றுது இங்கே
ஆட்சியும் சட்டமும் அவர்களுக்கு
நெடுநாட்களாகவே அட்சதை தூவி உதவுது பார்
கண்ணியம் உனக்கு வேண்டுமெனில்
கண்காணிப்போடு உன்னை காத்துக்கொள்.
-- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (22-Jan-19, 2:36 pm)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : arivup penne
பார்வை : 1233

மேலே