காதலுக்கு வடிவம்

வார்த்தை வடிவமாகியதோ?

வடிவம் வார்த்தையாகியதோ?

தெரிந்துக் கொள்ள

காதலின் வடிவம்தேட

உவமையோடு காதல்
கவிதைகள்!

உள்ளம் கவர்ந்திடும்
விதமாய்

காதல் காவியங்கள்

அழகாய் சொல்லப்படும்

காதல் கதைகள்

இவையாவும் காதலுக்கு
வடிவம்

தரும் முயற்சியோ?

என் தேடலில்
நான் கண்டது

வடிவுகண்டு வந்தபின்
காதல்

கேள்விக்கு பதிலும்

பதிலுக்கு கேள்வியுமாய்
ஆரம்பித்து

கனவுசுகமும் கற்பணை
மயக்கமும்

வடிவமில்லா வார்தைகளின்
கூட்டணியாய்

வலம்வர இன்றும்

காதலுக்கு உருவகமாய்
ஒற்றை ரோசா!

காதலுக்கு வடிவம்jQuery1710561510890107807_1548174806528jQuery171014631714941175056_1548175052550jQuery17109707136983491416_1548240844309

எழுதியவர் : நா.சேகர் (22-Jan-19, 10:02 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 279

மேலே