அரசியல் - சிறு குறிப்பு

எது /எதில் அரசியல்?

ஆழ்பவர்களின் அதிகாரத்திலா?
எதிர்ப்பவர்களின் வெளிநடப்பிலா?

விவாதங்களின் பேசுபொருளிலா?
விதைப்பவனின் பரிதவிப்பிலா?

திரைக்கதையின் மையக்கருவிலா?
தினசரிகளின் கூக்குரலிலா?

கொடுக்கும் இலவசத்திலா? - அதை
கொண்டாடும் கூட்டத்திலா?

வறியவரின் வரிச்சுமையிலா?
வலியவரின் வரி ஏய்ப்பிலா?

வாய்தா தின்னும் வழக்கிலா?
வாய்மை பொய்க்கும் தீர்ப்பிலா?

இத்தனை
விடையறியா வினாகுறிகள் பின்னே
அரசியல் அரங்கேற்கிறது...

என்றாகிலும்
வினவலுக்கான விடை
அறியப்படும்...
அன்று
அரசியல்
அதை சார்ந்தோர் மதிப்பு
அம்மஞ்சல்லிக்கும்
குறைவாக!!!

எழுதியவர் : காதம்பரி (24-Jan-19, 8:58 pm)
சேர்த்தது : காதம்பரி
பார்வை : 1198

மேலே