முகவரி மறந்த கவிதை

புலராத  பொழுதில்
புழுதியில் புரண்டபடி
கூரை வீட்டின் முன்
தவமிருந்த

உச்சி வெயிலின் வேக்காட்டில்
கதவுகள் திறப்பதற்காக
சுடும் தரையில்
உழன்று கொண்டு இருந்த

மங்கிய மாலைப் பொழுதில்
பள்ளி ஒரத்தில்
கவனிப்பை ஈர்த்தபடி
சுழன்று கொண்டிருந்த

இருளும் நெருங்கிவிட
எவரும் கவனிக்கா காகிதமாகி
குப்பைகளின் நடுவில்
கதகதப்புக்காக
தஞ்சம் வேண்டி இறைஞ்சுகிறது
முகவரி மறந்த அக் கவிதை ஒன்று...

எழுதியவர் : சா.மனுவேந்தன் (25-Jan-19, 7:38 am)
சேர்த்தது : மனுவேந்தன்
பார்வை : 299

மேலே