தருவாயாக

கடற்கரையில் புதைத்த பிணம் எழுந்து வந்து அலைகளை இரசித்துக் கொண்டிருக்கையில் பதவியில் இருந்தாலே பாரத ரத்னா கிடைக்குமே என்று சுடுகாட்டில் பேய்கள் அலறிக் கொண்டிருந்தன நாளைய பிணங்கள்.

வெம்போடு பட்டங்களும் பதவிகளும் தூக்கிப் போட வேண்டியவை.
செத்த பிறகும் சிலருக்கு பதவி ஆசை விடுவதில்லை.
பேயாக ஓடுகிறான் பணம் தேடி,
நோயால் சாகிறான் குணமிழந்து,

சந்தனமும் ஜவ்வாதும் பூசி அக்கினியில் பிணத்தை எரித்தாலும் அந்த பிண வாடை போகாதப்பா.
மனித பேராசை மாறாதப்பா.
மாமனும் மச்சனும் பகை என்பான்.
ஒரு குடும்பத்திற்குள்ளேயே குழி பறிப்பான்.
அன்பை விட சட்டமே உயர்ந்தது என்பான் பழி உணர்ச்சியோடு.

இப்படிப்பட்டவர்களோடு நமக்கென்ன உறவு வேண்டியிருக்கு?
அதைவிட துறவு உயர்ந்தது தான்.
அத்துறவையும் கேவலப்படுத்தும் கஞ்சா குடிக்கியான ஏமாற்றுக் காவிகள் ஒழிக்கப்பட வேண்டும்.

கொள்ளையடிக்கும் கோயில்களெல்லாம் தரைமட்டம் ஆகும்,
ஆழிப்பேரலையின் ஆனந்த தாண்டவம் கண்டே நானும் அழிய,
பூமி எங்கும் பசுமை செழித்து குளுமையில் மனித மிருகங்கள் தவிர்த்து மற்ற உயிர்கள் வாழ இயற்கையே சுதந்திரமான குடியரசு அமைத்து தருவாயாக.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (27-Jan-19, 10:45 am)
பார்வை : 700

மேலே