அவன், அன்றும், இன்றும்

என்ன தவம் செய்தேனோ கண்ணே
இப்படி உன் பார்வை என் பார்வையோடு சேர
சேர்ந்து நமக்குள் காதல் தந்து -வாழ்வில்
கணவனுமாய் இணைக்க இனிதே வாழ்ந்திட
என்றெல்லாம் சொல்லியது நீதானா , என்னவனே,
இன்றோ நீ , உன் பார்வை வேம்பாய் கசக்குதடி
என் பார்வையில் நிக்காதே போய்விடு என்று
என்னை தள்ளிவிட பார்க்கிறாய் ...........
ஏன், ஏன், நீயே அறிவாய்.... உன்னை நான்
இந்த புதியதாய் உன்னைத் தாக்கிவரும்
மது அருந்தும் பழக்கத்தை அறவே விடவேண்டும்
என்று கேட்டதற்கு; நீ அதற்கு சொன்ன பதிலை
நினைவுபடுத்தவா....நீ சொன்னாய்' அடியே நான்
உன்னை துறந்திட ஒரு நொடியும்கூட
யோசிக்கமாட்டேனடி , ஆனால் ஒருபோதும்
மது அருந்துவதை என்னால் துறந்திட முடியாது
என்றாயே...... அப்படி அன்று சொன்னதும் நீதான்,
இப்படி என்னை வெறுத்து சொல்வதும் நீதானே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Jan-19, 6:29 pm)
பார்வை : 259

மேலே