அவளுள் அவள் அழகே

சூழிடர் காரணியா?
சூழலியல் மாற்றமா?
ஊழ்வினை பயனா?
பரிசோதனையின் முடிவில்
மார்பு புற்று...

அதுகுறித்து ஆலோசிக்க
அவசியமோ அவகாசமோ இல்லை..
காலனுடன் போரிட வேண்டிய
கட்டாயத்தில் போர்
களம் புகுந்தாள்...

விரும்பத்தகா மாற்றங்கள் பல
எதிர்கொண்டாள்...

மார் துறந்தாள்..
தலைமயிர் இழந்தாள்..
வலி பொருத்தாள்..
கிலி விடுத்தாள்..
பிணி நீக்கினாள்...
புதுப்பிறவி எடுத்தாள்..
இலக்கு நோக்கி புறப்பட்டாள்.!

வழி வழியாய் - நம்
மக்கள் கூட்டம் எழுதி வைத்த
மங்கை அழகின் இலக்கணம் இழந்து வீதி நடந்தவளை- இந்த
மானுடம் பார்க்கும் பார்வையில்
என்னவோ
மரித்துப் போகிறாள்
மனதளவில்....

ஆயினும்
காலனை வென்றவள் என்ற
திமிர் தந்த நிமிர்வுடன்
நெஞ்சுரம் கொண்டு
நடக்கலனாள்...

அவளுள்
அவள் அழகே!!!

எழுதியவர் : காதம்பரி (27-Jan-19, 10:27 pm)
சேர்த்தது : காதம்பரி
Tanglish : avalul aval azhage
பார்வை : 277

மேலே