மாயா

மனம் கொதித்தது...
இதயம் பட.... பட... வென அடிக்கும் சத்தம் எனது காதுகளுக்கு கேட்பது போல் உணர்ந்தேன்...
நடையை இன்னும் வேகப்படுத்தினேன்...
எங்கோ நாய் ஒன்று ஊ....ஊ... என்று ஊழையிட்டுக் கொண்டிருந்தது..

என் கையிலோ ஒரு விளக்கு மட்டுமே... மனதிற்குள்ளும் சிறிது பயம் எட்டிப் பார்த்தது, என்ன இருந்தாலும் இந்த இரவு நேரத்தில் இந்த காட்டுப் பக்கம் வந்திருக்க வேண்டாமோ என்ற எண்ணம் வேறு..
முகமெல்லாம் வியர்வை அரும்பியது... மெதுவாக வீசிய தென்றல் கூட எனக்கு அனலாக தெரிந்தது... அவளை நினயக்கும் போது...
இன்று எப்படியும் எரித்து விடவேண்டும் என்ற எண்ணத்தில் நடையை மீண்டும்  வேகப்படுத்தினேன்....
அவளுடைய எண்ணங்கள் என் மனதினை விட்டு அகல மறுத்து மீண்டும் மீண்டும் அலைகளாய் திரும்பி வந்தது... அவளுடைய ஸ்பரிசம் என்னை தீண்டுவது போல் ஓர் உணர்வு.. எத்தனை நாட்கள் என் தோள்களில் சாய்ந்திருப்பாள்... எத்தனை எத்தனை கடிதங்கள்... அத்தனையும்... சே... சே என்று தலையை உதறிக் கொண்டேன்.
நான் வரவேண்டிய இடம் வந்தாயிற்று.
விளக்கை ஓரமாக வைத்தேன், ஏற்கனவே மேடிட்டிருந்த இடத்தை தயாராக வைத்திருந்த மண்வெட்டியினால் வெட்ட ஆரம்பித்தேன்...
உடலில் ஒரு நடுக்கம்....
உடலை வியர்வை நனைத்துக் கொண்டிருந்தது..
இதோ தட்டுப்பட்டு விட்டது... தடயம் இல்லாமல் எப்படியாவது எரித்து விடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டேன்...
விளக்கிலிருந்து மண்ணெண்யை ஊற்றினேன், தீப்பெட்டியிலிருந்து ஒரு குச்சியை உருவி பற்றவைத்து எரிந்தேன் "தீ குபுக் " என்று பற்றிக்கொண்டது... லேசான கருகல் வாசமும் நாசியை தீண்டியது... அப்பாட என்று பெரு மூச்சொன்றை வெளிவிட்டேன் என்னவள் " மாயவின்" கடிதங்கள் அனைத்தையும் தீக்கு இறையாக்கின மனநிறைவோடு... சிவாவகிய நான்....

எழுதியவர் : சா.மனுவேந்தன் (28-Jan-19, 12:12 pm)
சேர்த்தது : மனுவேந்தன்
Tanglish : maya
பார்வை : 480

மேலே