உன்னை தேடுகிறேன்

உன்னைத் தேடுகிறேன் திசைகள்தோறும்...

உன் அன்பு புரிந்துகொள்ள முடியா இன்பம் தருகிறது...

என் காதுகள் இரண்டும் உனது குரலின் ஓசையைத் தேடுகிறது...

என் கண்களின் தேடலெல்லாம் உன் பிம்பத்தை நோக்கியே இருக்கிறது....

எவ்வளவு கூட்டம் சூழ இருந்தாலும் உன் இருப்பை உணர மனம் அலைபாய்கிறது..

உன்னைப் பற்றிய நினைவுகள் எல்லாம் காட்சிகளாக நடமாடுகிறது....

என் இதயம் அதன் ஆழத்தில் உள்ள என் தேவதையைக் குறித்த எண்ணங்களை வெளிப்படுத்தியவண்ணம் இருக்கிறது...

உன்னை தோற்கடிக்க ஒருபோதும் மனம் வராது; உன்னிடம் தோற்றுப்போவதில் என்னவோ அப்படி ஒரு சந்தோசம்...

சிலநேரம் நீ பேசும் வார்த்தைகளின் வலியை மறப்பதே சுகமான அனுபவம்...

உன்னிடமிருந்து என் மனம் சேகரித்த சத்தமெல்லாம் ஓசையில்லா ஒலியினை எழுப்பிக் கொண்டேயிருப்பது அற்புதம்...

ஆம், என் மனைவியை மனதார நேசிக்கிறேன்; அவள் அன்பை அனுபவித்து என் நாட்கள் நகர்கிறது; என்னை முழுமையாக ஆக்கிரமித்து இருக்கிறாள்...

எழுதியவர் : ஜான் (28-Jan-19, 5:27 pm)
சேர்த்தது : ஜான்
Tanglish : unnai thedukiren
பார்வை : 808

மேலே