தொடும் வானம் தொடும் தூரம் தான்

கோடி கோடியாய் பல இன்னல்கள்
கொட்டிக்கிடக்கின்றன பல துன்பங்கள்
குறைகின்ற நாயின் பல குரல்கள்
அடங்கிவிட்டன என் பல திறன்கள்
படிப்பிற்கு மதிப்பில்லா இவுலகில்
பணமேன்ற காகிதத்தை மதிக்கின்றனர்
வண்ணத்துப்பூச்சியாய் பறந்த என்
வண்ணங்களை கலைத்துவிட்டு
சிட்டுக்குருவியாய் திரிந்த என்
சிறகுகளை உடைத்துவிட்டு
தென்னையாய் வளர்ந்த என்
வண்ணங்களை தகர்த்ததால் தவிக்கின்றேன்
ஆனால்
இன்னல்களும் துன்பங்களும்
மின்னல்களாய் வந்தாலும்
நாயிகளின் குரைச்சலுக்கு அஞ்சாமல் - என்
திறமையும் குறையாது இமயத்தை மிஞ்சாமல்
கலைத்துவிட்ட வண்ணங்களுக்கு
நிறமூட்டி மெருகேற்றி
வானெங்கும் பறப்பேன் துணிவோடு
உடைத்து விட்ட சிறகையும் மீட்டெடுத்து
சிறகடித்து பறப்பேன் சிறப்போடு
தகர்க்கப்பட்ட எண்ணங்களும்
தாமிரபரணியாய் ஊற்றெடுக்க
இவ்விண்ணையும் மண்ணையும்
நொடி பொழுதினில் தொட்டு விடுவேன்
எனக்கு தொடும் வானமும்
தொடுகின்ற தூரம் தான்
தொட்டுவிடுவேன் கிட்டிய நொடியில்
இப்படிக்கு
பெண்ணியம்.......

எழுதியவர் : bhuvaneshwari (30-Jan-19, 4:34 pm)
பார்வை : 1788

மேலே