வாழ்க்கை எனும் நாடகமேடை

உதிக்காத சூரியனும்க்கும் , நம்மை மதிக்காத உறவுக்கும்
ஏது மதிப்பு இப்புவியுலகில்
மறையாத நிலவுக்கும் , கரையாத கண்ணீருக்கும்
குறையாது அழகு என்றென்றும்
இமைக்காத கண்களுக்கும் , துடிக்காத இதயத்திற்கும்
இல்லாது ஓட்டம் உயிரிலும்
ஏற்கமுடியாத கசக்கும் உண்மை நீ !
என்ன ஆனாலும் எதிர்த்து நிற்கும் தைரியம் நான் !
நம் கணக்கிடும் பக்கங்களின் கிறுக்கப்பட்ட கதைகளின் முற்றுப்புள்ளி தான் விதி !
இதுவே வாழ்க்கை எனும் திரைகதம்பம் ...

எழுதியவர் : ஹேமாவதி (30-Jan-19, 9:57 pm)
சேர்த்தது : hemavathi
பார்வை : 323

மேலே