பெற்றபொருட்கு ஏற்ப விருப்பமொடு கொடுப்பர் மேலோர் – நன்னெறி 13

நேரிசை வெண்பா

பெருக்க மொடுசுருக்கம் பெற்றபொருட்(கு) ஏற்ப
விருப்ப மொடுகொடுப்பர் மேலோர் - சுரக்கும்
மலையளவு நின்றமுலை மாதே மதியின்
கலையளவு நின்ற கதிர். 13 - நன்னெறி

பொருளுரை:

அமுதம் சுரக்கும் மலை போன்ற தனங்களை உடைய பெண்ணே!

நிலவு தன் பிறை அளவு மாறுதலுக்கு ஏற்ப ஒளி வீசுவது போல, உயர்ந்த குணம் உடையவர்கள் கூடிக், குறையும் தன் செல்வச் செழிப்பைப் பொறுத்து விருப்புடன் வறுமையுடன் இருப்பவருக்கு உதவுவார்கள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Jan-19, 8:14 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 50

சிறந்த கட்டுரைகள்

மேலே