பதம் வியூகம்

#பத்ம வியூகம்..!

என்னைச் சுற்றிலுமாய்
அமைக்கப்பட்டிருகிக்கிறது
பத்ம வியூகம்..!

அபிமன்யுவைப் போல
வியூகத்தை உடைத்தெறியும்
எண்ணம் ஏதும் எனக்கிருக்கவில்லை..
அடிமைப்பட்டு
தோல்வியைத் தழுவவே விரும்புகிறேன். !

சுற்றி.. சுற்றி…
பல சுற்று அடுக்குகளில்...
அம்பினை ஏந்திய வீரர்கள் என்று
தவறாக எண்ணி விடாதீர்கள்
அன்பினை எந்தியவர்கள்தான்
அத்தனை அடுக்குகளிலும்..!

தப்பிக்கும் எண்ணமின்றி
சரணடைந்து விடுகிறேன்..!

வியூகத்தின் காவலில்
அன்பின் அகண்ட சிறையில்
நான் என்றும் கைதியே..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (1-Feb-19, 12:15 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 110

மேலே