உன் குறிப்பில் இருந்து

உனது நாட்குறிப்பில்
என்னைப்பற்றிய குறிப்புகளை
நான் தேடிக்கொண்டிருந்தேன்.

எனது பெயர் இல்லை.
மாறாக சிலவொன்றை
கண்டு குறித்துக்கொண்டேன்.

உடலொரு எண்ணமும்
மனமொரு எண்ணமுமாய்
நீ எழுதியிருந்த யாதொன்றிலும்...

பிசையப்பட்ட கிழக்கு.
உதிர்ந்துபோன காலங்களில்
மிதக்கும் இசைக்குறிப்புகள்.


ஒரு வினாவின் மையத்தில்
உறைந்து போன மூளை.
கரையில் நடக்கும் மீன்கள்.

இந்த வரிகளாய் நான்
இருக்கக்கூடுமென்ற கற்பனை
உனக்கு(ம்) வந்திருக்கலாம்.

நீ வருமுன் இவைகளை
நான் படித்திருக்க ஆவல்தான்.

இருந்தாலும்...
நீ வந்துவிட்டாய்.  ஒரு
கோப்பையில் காலமாகியதோர்
வாசனை ஒளிந்திருப்பது போல.

எழுதியவர் : ஸ்பரிசன் (2-Feb-19, 12:14 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 59

மேலே