அழகு நிலாவே

அழகு நிலாவே!

அகத்தைக் கவரும் அழகு நிலாவே
சுகத்தை சுமந்து சுற்றும் பலாவே

முகத்தின் புன்னகை என்னை இழுக்குது
மகராசி உனைக்கண்டு மனதும் பழுக்குது

வஞ்சி உனைதொடவே கெஞ்சி வருகையிலே
அஞ்சி அடியெடுது அப்பாலே போவதுஏன்?

கலசங்கள் நீசுமந்து கண்பார்த்து போகயிலே
நலமழிந்து என்மனது நோய்க்கு ஆளாகுதடி

இதமாக உன்மூச்சு என்மீது படும்போது
மிதக்கின்றேன் சொர்க்கத்தில் மீள்வேனோ தெரியலயே

வம்பின்றி உன்னொடு வாழ்ந்திடவே விரும்புகிறேன்
தெம்பாக நானிருப்பேன் தேன்குடமே நீகிடைதால்

சொந்தமாய் நீவந்தால் சோகங்கள் விலகுமடி
சந்தங்கள் என்வாழ்வில் சங்கீதம் பாடுமடி

சரமாக கட்டிவைத்த சந்தன முல்லைநீ
கரம்பிடித்து என்னொடு கைகோர்க்க வருவாயா?

நிழலாக நீவந்தால் நித்தம் வாழ்ந்திடுவேன்
குழலூதும் கண்ணனென கும்மாளம் போட்டிடுவேன்

தேவையை சொல்லிவிட்டேன் தேனமுதே வருவாயா?
பாவையுன் பார்வைஎன் பசியாற்றும் அறிவாயா?

தேனும் தினைமாவும் சேர்ந்தால் இனிமையடி
தேவதையே நீமறுத்தால் என்வழ்வு தனிமையடி

இளமை இருக்கையிலே இன்றே இணைந்திடுவோம்
வளமான வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்திடுவோம்

பாவலர். பாஸ்கரன்

எழுதியவர் : சொ. பாஸ்கரன் (3-Feb-19, 8:23 am)
சேர்த்தது : சொ பாஸ்கரன்
பார்வை : 85

மேலே