நீயே நீயே

கண்ணி நீ ஒரு கணினி
தினமும் எனைத்திண்ணும் கனி நீ

என்னுள் எரியும் தீ நீ
என்எ ண்ணம் எல்லாம் நீ நீ

என்னை உறிஞ்சும் தேனீ
என் மனக்கூட்டில் தேன் நீ

என் கண்ணை சுற்றிய துணி நீ
மற்றப் பெண்ணை பார்க்கையில் தூண் நீ

என் இதயம் படர்ந்த பனி நீ
என் அன்பில் கொஞ்சம் பணிந்திடு நீ


எங்கோ! பிறந்த மான் நீ
என்னுள் விழுந்தாய் ஏன் நீ

என்னுள் நீ
எங்கும் நீ
எனக்கே எனக்காய் நீ! நீ!...

எழுதியவர் : கல்லறை செல்வன் (4-Feb-19, 9:02 pm)
சேர்த்தது : கல்லறை செல்வன்
Tanglish : neeye neeye
பார்வை : 725

மேலே