பேரன்பு இயக்குநர் இராம் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா இரவி

பேரன்பு



இயக்குநர் : இராம் !

திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.


நடிப்பு : மம்முட்டி, ‘தங்க மீன்கள்’ சாதனா, அஞ்சலி


******

மூளை முடக்குவாதம் வந்த தன் பெண்குழந்தையிடம் அன்பு செலுத்தும் ; அல்ல பேரன்பு செலுத்தும் தந்தையாக மம்முட்டி நடித்து உள்ளார், அல்ல வாழ்ந்து உள்ளார்.



நடிப்பில் முத்திரை பதிக்கும் நடிகர் மம்முட்டிக்கு நடிக்க நல்ல வாய்ப்பு. சில காட்சிகளில் கண்களில் கண்ணீர் வரவழைத்து, பார்க்கும் நம் கண்களிலும் கண்ணீர் வரவைத்து வெற்றி பெற்றுள்ளார்.



‘தங்கமீன்கள்’ சாதனா-விற்கு தேசிய விருது உறுதி. நடிப்பில் பின்னி எடுத்துள்ளார். மூளை வளர்ச்சி குறைந்த சிறப்புக் குழந்தையாக மிகச் சிறப்பாக நடித்துள்ளார். படம் முழுவதும் வாயையும், கை-கால்களையும் கோணலாக வைத்து நடித்து பார்ப்பவர்களுக்கு உண்மையிலேயே மூளை முடக்குவாதம் வந்த பெண் தானோ! என வியக்கும் வண்ணம் நடித்துள்ளார், பாராட்டுக்கள்.



சிறப்புக்குழந்தைகளின் சேட்டையை இந்த சமுதாயம் மனிதநேயத்துடன் அணுக வேண்டும். ஆறுதலாக இருக்க வேண்டும் என்ற நல்ல கருத்தையும், திருநங்கைகளையும் மதிக்க வேண்டும் என்ற கருத்தையும் திரைப்படத்தின் மூலம் நன்கு பதிவு செய்துள்ளார் இயக்குநர் இராம்.



மம்முட்டி துபாயில் 10 ஆண்டுகள் வேலை செய்கிறாய். எப்போதாவது தாயகம் வந்து செல்கிறார். சிறப்புக்குழந்தையை வைத்து பார்த்த அம்மாவின் அத்தை, கொழுந்தன், அக்கம்பக்கம் ஏச்சு பொறுக்க முடியாமல் சிறப்புக்குழந்தையை விட்டுவிட்டு ஓடிவிடுகிறாள். மம்முட்டியின் பொறுப்பிற்கு மகள் வருகிறாள். மனைவியை திட்டாமல் அவள நல்லவள் தான், நான் தான் தப்பு செய்துவிட்டேன் என்று வருந்துகிறார்.



அம்மா சென்று விட்டு, பிரிவால், கவலையால், சாதனா அப்பாவுடன் பேச மறுக்கிறாள். அவளை மகிழச்சியாக வைத்திருக்க முடியாத மம்முட்டி பெரும்பாடுபடுகிறார். பாடுகிறார், ஆடுகிறார், நாய் போல நடிக்கிறார், தாய் போல நடக்கிறார், இறுதியில் மகளை பாசத்தால், அன்பால் கவர்ந்து விடுகிறார்.



சிறப்புக் குழந்தைகளிடம் எல்லாம் சில சிறப்பம்சங்கள் இருக்கும். சாதனா-விற்கு சிட்டுக்குருவி மீது பாசம். பறக்க முடியாமல் கீழே விழுந்து கிடக்கும் சிட்டுக்குருவியை பார்த்து அழுகிறாள். அப்பா மம்முட்டி குருவியை எடுத்து காப்பாற்றி, மருத்துவரிடம் கொண்டு சென்று காப்பாற்றி மகளை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறார். மகளுக்காக குதிரையை வாங்கி வளர்க்கிறார். குதிரையின் மீது அன்பு செலுத்துகிறார் சாதனா.



மம்முட்டி மகள் சாதனா-வை, மம்முட்டியின் அம்மா வடிவுக்கரசியே திட்டுகின்றார். மம்முட்டியின் தம்பி மனைவி, உங்க மகளைப் பார்த்து அவள் போல என் மகளும் செய்து பார்க்கிறாள். எனவே, உங்க மகளை கூட்டிக்கொண்டு சென்று விடுங்கள் என்கிறார். இவர்கள் இருப்பது வாடகை வீடு. அக்கம்பக்கம் உள்ள சொந்தவீட்டுக்காரர்கள் சேர்ந்து வந்து, உங்க மகள் கத்துவதால் நாங்கள் தூங்க முடியவில்லை. எனவே வீட்டைக் காலி செய்து கொள்ளுங்கள் என்கின்றனர்.



இதனால் ஆள் அரவம் இல்லாத காட்டில் உள்ள பெரிய வீட்டை வெள்ளைக்காரியிடமிருந்து சொற்ப விலைக்கு 10 இலட்சத்திற்கு வாங்குகிறார். இதனை அறிந்த ரவுடிக் கும்பல் 15 இலட்சம் வாங்கிக் கொண்டு விற்று விடு என்று மிரட்டுகின்றனர். ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு அது. எப்படியாவது அந்த வீட்டைப் பறிக்க அஞ்சலியை வேலைக்காரி போல அனுப்பி வைக்கின்றனர்.



அஞ்சலியும் சிறப்பாக நடித்து உள்ளார். இந்த வீட்டை விட்டு நகரத்திற்கு சென்றால் நல்லது என்று சொல்கிறாள். மம்முட்டி மறுக்கவே இறுதியாக மனமில்லாமல் சாதனா-வை கிணற்றில் அமுக்கி கொல்ல முயற்சி செய்கிறார். இதனைக் கண்ட மம்முட்டி, அஞ்சலியை வேண்டாம் என்று விரட்டி விடுகிறார்.



சமுத்திரக்கனி மருத்துவராக வருகிறார், சாதனா-வை இப்படி சிறப்பு குழந்தைகளுக்கான விடுதியில் சேர்க்க அறிவுரை வழங்குகிறார். மனமில்லாமல் விடுதியில் சேர்க்கிறார். அங்கு மகளை அடித்து கொடுமைப்படுத்திய விடுதி காப்பாளரை அடித்து மகளை அழைத்துச் செல்கிறார்.



ரவுடிக்கும்பல் சதித்திட்டம் தீட்டி காட்டில் உள்ள வீட்டை பறித்து விடுகின்றனர். வீடு இல்லாமல் விடுதியில் அறை எடுத்துத் தங்கி வீடு பார்த்து வருகிறார்.



பல இன்னல்கள் அடைந்து மனம் வெறுத்து கடலுக்குள் சென்று இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து கடலுக்குள் புகும் போது, திருநங்கைத் தோழி வந்து, தடுத்து காப்பாற்றுகின்றார். கடைசியில் திருநங்கை, சாதனா மீது பேரன்பு செலுத்துகின்றாள், திருநங்கை மம்முட்டிக்கு மனைவியாகி விடுகிறாள்.



சிறப்புக் குழந்தைகள் மீது பேரன்பு செலுத்துங்கள் என்று வலியுறுத்தும் விழிப்புணர்வி விதைக்கும் மிகச்சிறந்த படம். இயக்குநர் இராமிற்கும், படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் பாராட்டுக்கள்.



பாலியல் ஆசை பெரும்பாலும் சிறப்புக்குழந்தைகளுக்கு வருவதே இல்லை. தொலைக்காட்சிப் பார்த்து வருவதாகக் காட்டி உள்ளார். சில காட்சிகளை தவிர்த்து இருந்தால், படம் இன்னும் மிகச்சிறப்பாக இருந்திருக்கும், நல்ல படம், அல்ல அல்ல நல்ல பாடம்.



சிறந்த நட்சத்திரம் மம்முட்டி நீண்ட நாட்களுக்குப் பின் நடித்துள்ள தமிழ்ப்படம் .மிகச் சிறப்பாக நடித்துள்ளார் .தங்கமீன்கள் சாதனா நடிப்பில் சாதனை படைத்துள்ளார் .பாராட்டுக்கள் .

இயக்குனர் இராம் மனதில் பட்டதை எல்லாம் படமாக்கி விடுகிறார். அதுதான் அவரது பலமும் பலவீனமும் .சாதனா பால் உணர்வால் தொலைக்காட்சியின் திரையில் முத்தமிடுவது போன்ற சில வக்கிரமான காட்சிகள் படத்தின் தரத்தை குறைத்து விடுகின்றன.

.பாலியல் தொடர்பான காட்சியால் மட்டும் இல்லாமல் இருந்து இருந்தால் படத்திற்கு யு ( U ) சான்று மட்டுமே கிடைத்து இருக்கும் .யு மட்டும் இருந்திருந்தால் குடும்பத்துடன் குழந்தைகளுடன் சென்று பார்க்கலாம் .ஆனால் சில வக்கிர காட்சிகள் காரணமாக யு ஏ ( U/ A) சான்று வழங்கி உள்ளனர் .

இயற்கை அதிசயமானது ,ஆபத்தானது .இனிமையானது, இரக்கமற்றது என்ற கவிதை வரிகள் நன்று என்றாலும், அத்தியாயம் என்று சொல்லி வரிசையாக எண்கள் போடுவதை தவிர்த்து இருக்கலாம் .சலிப்பு இல்லாமல் இருந்து இருக்கும் .
மொத்தத்தில் சமுதாய விழிப்புணர்வு விதைக்கும் மிக நல்ல படம் .சிறப்புக் குழந்தைகள் மீது கோபம் கொள்ளாமல் எல்லோரும் பேரன்பு செலுத்திட வலியுறுத்தும் படம் .

யுவன் சங்கர் ராஜா இசை நன்று .பாடல்கள் நன்று .இரைச்சல் இன்றி தேவையான அளவு பின்னணி இசை நன்று .ஒளிப்பதிவு மிக நன்று இயற்கை படப்பிடிப்பு சிறப்பு

எல்லோரும் திரையரங்கம் சென்று பார்த்து படத்தை வணிக ரீதியாக வெற்றி பெற வைக்க வேண்டும் .குறிப்பாக சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்
.

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (5-Feb-19, 9:09 am)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 46

மேலே