ரேனுஸ்ரீ - பகுதி 5

கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான் என்
எண்ணில் கலந்தே இருக்கின்றான்-மண்ணில்
கலந்தான் என் பாட்டில் கலந்தான் உயிரில்
கலந்தான் கருணை கலந்து....

என கடவுள் வாழ்த்தை பாடலாக மனதில் பாடி பாத்துக்கொண்டிருந்தேன்.

அப்போது நெருக்கமானவர்கள்/நமக்குரியவர்கள் யாரோ அருகில் இருப்பதுபோன்றும் என்னையே பார்த்துக்கொண்டிருப்பது போன்றும் தோன்றியது.

நான் புத்தகத்தை பார்த்தபடியே ஏன் இவ்வாறு தோன்றுகிறது என்று யோசித்துக்கொண்டிருந்தேன்,சில நொடிகளுக்கு பிறகு என் மனம் இடது பக்கமாக பார்க்க கூறியது.
நான் பார்த்தபோது இரு மாணவர்கள் எங்கள் வகுப்பை விடுத்து பக்கத்துக்கு வகுப்பான எட்டாம் வகுப்பை நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

அதில் ஒருவனை மட்டும் பார்த்தபடி அமர்ந்திருந்தேன்,அவன் நீல நிற சட்டையும்,வெள்ளை நிற pant ட்டும் அணித்திருந்தான்,அவனுடைய கூந்தல் அடர்த்தியாகவும்,கருமையாகவும் தெரிந்தது,அவன் கையில் நீளமான ஒரு புத்தகத்தை வைத்திருந்தான்,அவன் திரும்பி இருந்ததால் அவனுடைய முகத்தை காணயியலவில்லை.

அந்த மாணவர்கள் எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவனிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்,அப்போது அந்த வகுப்பு ஆசிரியர் வகுப்பில் இல்லை,பேசிவிட்டு வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டனர்.
என்னால் அவனுடைய முகத்தை சரியாக பார்க்க முடியவில்லை.

அன்று பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற பிறகும் அவனை பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன்,அப்பா அம்மாவோடு அதிகம் பேசவில்லை,அண்ணனிடம் சண்டையிடவில்லை,small wonder ,ஜிபூம்பா,விக்ரமாதித்யன் என எனக்கு விருப்பமான டிவி நிகழ்ச்சிகளை பார்க்கும் போது என்னையே நான் மறந்து முழுமையாக அதற்குள் சென்றிருப்பேன் அனால் அன்று மூளையின் ஒரு ஓரத்தில் அவனுடைய நினைப்பு ஓடிக்கொண்டே இருந்தது.
படிக்கும்போது,டிவி பார்க்கும்போதும்,உணவருந்தும்போதும்,தூக்கம் கண்களை தழுவும் கடைசி நிமிடம் வரையிலும் அவனையே நினைத்தபடி இருந்தேன்.

மறுநாள் காலை கண் விழித்தவுடன் முதலில் நினைவுக்கு வந்தது அவன் உருவம் தான்,முகம் தெரியாத யாரோ ஒருவனை பற்றி தொடர்ச்சியாக நினைத்து கொண்டிருப்பதை நினைத்து என் மீது எனக்கே கோபம் வந்தது.
அன்று பள்ளி மதிய உணவு இடைவேளையில் உணவருந்தி விட்டு வகுப்பு கரும்பலகையை சுத்தம் செய்துகொண்டிருந்தேன்,அப்போது என் வகுப்பு தோழி பானு நான்கு மாணவிகளை தேர்தெடுத்தால்,எதற்காக என்ற காரணத்தை யாரிடமும் கூறவில்லை.

பானு அவளுடைய நெருக்கிய தோழியான பாரதியை முதலில் வெளியே அழைத்து சென்றால்,சிறிது நிமிடங்களுக்கு பிறகு இருவரும் வகுப்பிற்குள் வந்தனர்,என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.

இரண்டாவதாக என் பக்கத்தில் அமரும் இளவரசியை அழைத்துச்சென்றால்,அதே போல மீண்டும் சிறிது நிமிடங்களுக்கு பிறகு உள்ளேவந்தனர்.

மூன்றாவதாக சத்யாவை அழைத்தால்,பானுவும்,சத்யாவும் வகுப்பை விட்டு வெளியே செல்ல இருக்கும் போது பானு திடீரென எதையோ யோசித்தபடி என்னை திரும்பி பார்த்தால்.
பானு என் அருகில் வந்து "உன்ன மறந்தேபோய்ட்ட" என்று தலையில் கைவைத்தபடி கூறினால்.
என்ன சொல்ற?என்று புரியாமல் குழப்பத்தோடு அவளை பார்த்து கேட்டேன்.

ஒன்னு இல்ல நீ வா என்று என் கைகளை பிடித்து அழைத்து சென்று வகுப்பிற்க்கு வெளியே இருக்கும் வேப்ப மரத்தின் அருகே நிற்க வைத்தால்.

உணவு இடைவேளை என்பதால் பள்ளி மாணவர்கள் அனைவரும் வகுப்பறைகளின் வெளியே உட்கார்ந்து உணவுறுத்திக்கொண்டும்,உணவருத்தியவர்கள் பேசிக்கொண்டும்,விளையாடிக்கொண்டும்,அங்கும் இங்கும் நடந்துகொண்டும் இருந்தனர்
.
நானோ எதற்காக நிற்கிறோம் என்று புரியாமல் நின்றுகொண்டிருந்தேன்,அப்போது பானு யாரிடமோ சைகையில் பேசுவது போல இருந்தது,யாரோ என்னை பார்த்து கொண்டிருப்பது போன்று தோன்றியது அனால் யார் பார்க்கிறார்கள் எங்கிருந்து பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை.

எதுக்கு இங்க நிக்குறோ என்று பானுவை பார்த்து கேட்டேன்.

அதற்க்கு அவள் "சும்மாதா" என்று கூறினால்.

நா உள்ள போற என்று சொல்லிவிட்டு அங்கிருந்து செல்லமுயன்றேன்,ரேணு இரு என்று என் கையை பிடுத்து தடுத்தாள்,அதன் பிறகு சரி வா போலா என்று கூறி அவளும் என்னுடன் வகுப்பிற்குள் வந்தாள்.

ரேணு உன்கிட்ட ஒன்னு சொல்லனு என்று கூறினால்.

சொல்லு என்று கூறினேன்.

ரேணு,," ஸ்ரீ" னு ஒரு அண்ணா நம்ப school ல தா 8th படிக்குறாரு என்று தயக்கத்தோடு கூறி சில நொடிகள் பேச்சை நிறுத்திவிட்டு மீண்டும் தொடங்கினாள்,நம்ப class கு எதிர்க்க,principal room கு பக்கத்துல 8th "A " இருக்கு இல்ல அங்கதா படிக்குறாரு.
நேத்து principal sir ஸ்ரீ அண்ணா கிட்ட ஒரு ledger ர கொடுத்து நம்ப ஸ்கூல் ல இருக்க எல்லா டீச்சர்ஸ் கிட்டையும் signature வாங்கிட்டு வர சொன்னாரா,அதுக்காக நம்ப சார் கிட்ட sign வாங்க வந்த அப்பதா உன்ன பாத்தாரா,நம்ப class ல எல்லாரு பேசிட்டு,விளையாடிட்டு,தூங்கிட்டு இருந்தாங்களா ஆனா நீ மட்டு சீரியஸ் சா படுச்சுட்டு இருந்தியா,அத பாத்தது அந்த அண்ணாக்கு உன்ன ரொம்ப பிடுச்சுடுச்சா.

நானு,அந்த அண்ணாவு ஒரே tution ல தா படிக்குறோ,ரொம்ப நல்ல அண்ணா, ரொம்ப நல்லா படிப்பாரு,எங்க விட்டுக்கிட்டதா இருக்காரு.

நேத்து டியூஷன் முடுஞ்சு வீட்டுக்கு போகும்போதுதா எல்லாத்தையு என்கிட்ட சொன்னாரு.

நானு யாரு அந்த பொண்ணு?பாக்க எப்படி இருந்தா?எங்க உட்கார்ந்து இருந்தா?என்ன கலர் டிரஸ் போட்டு இருந்தானு கேட்ட.

அதுக்கு அவரு,எனக்கு அந்த பாப்பாவோட முகத்த தவற வேற எதுவும் நியாபகத்துல இல்லனு சொல்லிட்டாரு.

சரி அதாவது எப்படி இருந்ததுன்னு சொல்லுங்கன்னு கேட்ட?

ரொம்ப அமைதியான,அழகான முகம் னு சொன்னாரு.

சரி விடுங்க நாளைக்கு prayer ல பாத்துட்டு அந்த பொண்ணு எந்த கலர் டிரஸ் போட்டு இருக்கானு சொன்னிங்கனா அது யாருனு கண்டுபிடுச்சுடலானு சொன்ன.

சிஸ்டர்...நாளைக்கு friday எல்லாரு uniform ல இருப்பாங்க னு சொன்னாரு....

என்ன பண்றதுனு தெரியாம ரெண்டு பெரு டென்ஷன்னா இருந்தோ.

யாரு அந்த பொண்ணுன்னு கண்டு பிடிக்கதா ஒரு ஒருதரா வெளில கூட்டிட்டு போய் அந்த அண்ணா வ பாக்க சொன்ன ,அவரு உன்ன பாத்துட்டு நீ தா அந்த பொண்ணுன்னு சொன்னாரு.என்று கூறிவிட்டு இரு என்று அவள் புத்தக பையிலிருந்து ஒரு வாழ்த்து அட்டையை எடுத்து என்னிடம் கொடுத்தால்.
இத ஸ்ரீ அண்ணா உன் கிட்ட குடுக்க சொன்னாரு என்று கூறினால்.
அதை தயக்கத்தோடு பிரித்து பார்த்தேன்.
அதில்.

இனிய கிறிஸ்மஸ்,புத்தாண்டு
மற்றும் பொங்கல் நல்
வாழ்த்துக்கள்.

இப்படிக்கு,
ஸ்ரீ

என்று இருந்தது,அவனது கையெழுத்து மற்றும் வாழ்த்து அட்டையின் வடிவமைப்பு இரண்டுமே மிக அழகாக இருந்தது.
அவனுடைய பெயரை அதில் பார்த்தபோது தொலைந்த ஒரு பொருளை மீட்டது போலா இருந்தது.

வாழ்த்து அட்டை வெண்ணிறத்தில் அழகிய மூன்று சிவப்பு நிற ரோஜாக்களின் படத்தை கொண்டதாக இருந்தது.

தொடரும்....

எழுதியவர் : anuranjani (7-Feb-19, 5:25 pm)
சேர்த்தது : அனுரஞ்சனி மோகன்
பார்வை : 173

மேலே