எங்கே போறீங்க

#எங்கே போறீங்க..?

சின்ன சின்ன எறும்பாரே
எங்கே போறீங்க..?
மழைக்காலம் வரும் முன்னே
உணவு சேர்க்க போறேங்க..!

வண்ண பட்டு பூச்சியாரே
எங்கே போறீங்க..?
தேன் தருமந்த மலர்த் தோட்டம்
தேடிப் போறேங்க..!

குட்டி தட்டாம் பூச்சியாரே
எங்கே வந்தீங்க ..?
மழையடிச்ச பூமியைத்தான்
பார்க்க வந்தேங்க..!

மயிலாரே நடனத்தையே
எங்கு கற்றீங்க..?
மழை, மேகம் கண்டு மகிழ்ச்சியாலே
ஆட கற்றேங்க..!

பசுவினமே ஒன்று கூடி
எங்கே போறீங்க..?
பிரிக்க நினைக்கும் நரிக்கூட்டம்
விரட்டப் போறேங்க..!

கிளி, குருவி கூட்டம் இன்னும்
பார்க்கப் போறேங்க..
கேள்வி நிறைய கேட்டு
பதில் வாங்க போறேங்க..!

#சொ.சாந்தி

(5.11.17 அன்று சென்னையில் நடைபெற்ற, பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி அவர்களின் "வட்டநிலா வானத்துல நீயும்பாரு" நூல் வெளியீட்டு விழாவில் வாசித்த கவிதை.

சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (7-Feb-19, 7:54 pm)
சேர்த்தது : C. SHANTHI
Tanglish : engae poringa
பார்வை : 54

மேலே