விருப்பம்

தோட்டத்தில்
கட்டுண்டு கிடக்கும்
மல்லிகைகொடியைவிட
தோட்டத்தை கடந்து
மனம்வீசும்
அதன் பூக்களின்
வாசமாக
வாழ விரும்புகிறேன்...

மாடிவீட்டின்
அலங்கார பேழையில்
ஒய்யாரமாக வீற்றிருக்கும்
அழகு பொம்மையாக அல்லாமல்
புழுதியில் உருண்டு விளையாடும் சேரிக் குழந்தையின் மரப்பாச்சி
மொம்மையாகவே
இருக்க ஏங்குது மனசு...

எழுதியவர் : (8-Feb-19, 9:36 am)
Tanglish : viruppam
பார்வை : 139

மேலே