எப்பொழுதோ இப்பொழுதுபடித்தது-ஒரு அரட்டை

எப்பொழுதோ (இப்பொழுது) படித்தது-அரட்டை-1
இந்த வாரம் புதுமை பித்தனின் “அன்னை இட்ட தீ” படித்தேன்
தமிழை பற்றி தனி தமிழ் பதத்தை ஏன் உபயோகிக்கவில்லை என்று சிலர் சீறலாம்
பாஷை ஒரு சக்தியாயுதம், உள்ளத்தை திறந்து காண்பிக்கும், மறையவும் செய்யும், உபயோகப்படுத்தாது உறையில் போட்டு வைத்தாமல் துருப்பிடிக்கும். அந்த கதிதான் நம் பாஷைக்கும். பாஷை ஒரு சமூகத்தின் ஜீவ சக்தி. சொந்த பஷையில்தான் நமது அந்தரங்க உணர்ச்சிகளை வலிமையுடன் சொல்ல முடியும், இந்த இயற்கையை மறந்ததினால் நமக்கு நமது பாஷையே அன்னிய பாஷையாக இருக்கிறது. எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியாமல் நமது பழைய சங்கப்பலகையயையே தொத்தி பிடித்து கீழே கவிழ்கிறோம்.
தமிழ் “இன்ஸால்மெண்டு பாஷையல்ல” புதிய வார்த்தைகள் சேர்வது அவள் சுய உருவை குலைத்து விடாது. அவள் அரசி, புதிய வார்த்தைகளை பெறுவது, புதிய நாடுகளை சயித்து புதிய கலைச்செல்வங்களின் பண்டகசாலைகளை பெறுவதுதான் . இது பாஷை. இயற்கையின் சூட்சுமம். இதை கம்பன் அறிந்திருந்தான். அவன் காலத்து கலைச்செல்வர்கள் அறிந்திருந்தார்கள். அவன் இலக்கியத்தில் புதிய வார்த்தைகள், வாய் நிறைந்த வட சொற்கள் அழகு தெய்வத்தை அணி செய்கின்றன.
வசனம்:
தமிழில் வசனத்திற்கு இதுவரை ஸ்தானம் இல்லை. இதன் மூன்று காரணங்கள் ஒன்று எல்லா சமூகத்திற்கும் பொதுவானது
“ஆதி மனிதனிடம் மகத்தான அடக்க முடியாத உணர்ச்சிகள்தான் தென்பட்டன. அதைத்தான் அவன் அறிந்திருந்தான். அனுபவித்தான் அது ஆட்டத்தில் வெறியாட்டத்தில் ஆரம்பித்து நாட்டியத்தில் தனது முழு ஆகிருதியையும் பெற்றது. பாட்டில் (முதலில் கூப்பாடுதான்) ஆரம்பித்து கவிதையாக வடிவெடுத்தது. அதை சேமித்து வைத்தான் அதுதான் ஆதி இலக்கியம் ஆதி இலக்கியங்கள் எங்கும் பாட்டில் இருப்பதின் இரகசியம் இதுதான்.
தமிழுக்கு வசனம் பேச்சு மட்டிலேயே இருந்தன. காரணம் நாம் ‘ஓலையை’ ‘ இலக்கியத்தை சேர்த்து வைக்கும் பண்டகசாலையாக உபயோகித்தது. ஓலையில் நீண்ட வசன காவியம் எழுதி வைக்க முடியாது. இதனாலேயே வசனத்திற்கு உரை நடை என்று பெயர். கொடுக்கப்பட்ட்து. அதாவது பாட்டிற்கு பொருள் தெரிவிக்கும் நடை என்று கவிதை தெய்வத்தின் சேடியாக பிணைத்து வைத்ததினால் வசனத்தில் பேசுவதே கேவலம் என்ற அபிப்பிராயம் பண்டித பாவலர்களிடம் எற்பட்டு அவர்களை சீட்டுக்கவி முதல் எடுத்ததெல்லாம் பாடும் செய்யுள் பாத்திரங்களாகிவிட்டன. இதனால் வசனம் தமிழில் ஒரு வளர்ச்சி பெறாத ஆயுதமாக இருக்கிறது
வசனத்திற்கு ஒரு ஸ்தானம் கொடுக்க வேண்டுமானால் நமது துருப்பிடித்த அபிப்ப்ராயங்களை கொஞ்சம் ஒதுக்கி வைக்க வேண்டும். இலக்கிய தமிழுக்கும் பேச்சு தமிழுக்கும் நெடுந்தூரம் இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டிருப்பது பெருந்தவறு. அப்படி இருந்தால் “மெல்ல தமிழ் இனி சாகும்” என்பதில் சந்தேகமில்லை.
வாக்கியத்துக்கு உயிருண்டு. அது பல தசைகளையும், நரம்புகளையும், அவயங்களையும் கொண்ட ஒரு சிருஷ்டி. அதை நாம் உம்மைத் தொகுதிகளால் பிணிக்கப்பட்ட வெற்று வார்த்தை சங்கிலிகளாகா மதித்து விடக்கூடாது வாக்கியத்தில் கட்டுக்கோப்பு (Architectonics) மிகவும் முக்கியமானது. ஒரு வாக்கியத்தின் வார்த்தையின் அமைப்பு நயமான அர்த்த விசேஷங்களை தந்து விடும். வாக்கியங்களின் ஓசை இன்பம் கவிதையைப்போல் வசனத்திலும் இருக்கிறது.
இன்னும் நிறைய இருக்கின்றன. வாசகர்கள் நன்கு கவனிக்க வேண்டும். இது கட்டுரையாக்கிய காலம் புதுமைபித்தன், காந்தி 25, ஜூன் 1934
அதற்குப்பின் பெரும் வசனப்புரட்சியே ஏற்பட்டது என்பதும் அதில்தான், “அண்ணா, கலைஞர், போன்ற ஜாம்பவான்கள் தோன்றிய கதைகளும் உங்களுக்கு தெரியும்).
கூழுக்கு பாடி
கவிகளுக்கும் வறுமைக்குமிடையே சாசுவதமான நட்பு உண்டு. ஓளவை தமது இலக்கியத்தில் ஒரு மகத்தான நாடோடி.
பழுத்த வயதில்தான் நம்முன் தன் கவிதைகளை கொண்டு வருகிறாள். பெயரே குறிக்கவில்லையா? அவளைப்பற்றி. இவளுக்கு அற்புதமான கனவுகளான வார்த்தை கோவில்களை எழுப்ப முடியாது. உள்ளத்தின் துடிதுடிப்பை அப்படியே வெகு அழுத்தமாக இசைக்கும் சக்தி வாய்ந்தவள். முதிர்ந்த உலக அனுபவத்தினால் வாழ்க்கையின் நொடிகளை அறிந்திருந்ததினால் ஏற்பட்ட நியாய உணர்ச்சி, அவள் கவிதைக்கு ஒரு சோபையை கொடுக்கிறது. குடிசைகளிலும்,மாயமாளிகைகளிம் துடி துடித்த உள்ளங்களை துருவிப்பிடித்த ஓவியங்கள்தான் அவள் கவிதை.
நடு இரவு சோழ தேசத்து மன்னன் “சோதனை உலாவல்” வருகிறான் வழியில் கூனிக்குறுகிய கிழவி காலை நீட்டிக்கொண்டு படுத்திருக்கிறாள்
யார் அம்மே நீ? எங்கிருந்து வருகிறாய்?
கிழவியின் கூர்ந்த கண்கள் அவனை யார் என்று அறிந்து கொள்ளுகின்றன.
கானொந்தேன் நொந்தேன் கடுகிவழி நடந்தேன்,
யான்வந்த தூரம் எளிதன்று கூனன்
கருந்தேனுக் கண்ணாந்த காவிரிசூழ் நாடா,
இருந்தேனூக் கெங்கே யிட,ம்.
பதில் சொல்கிறாள். கிழவி தன்னையறிந்து கொண்டது மட்டுமல்ல அவள் ஒரு நல்ல கவி என்று அறிந்துகொள்கிறான் மன்னன்.
வரும் வழியில் ஒரு “ஹாஸ்ய சம்பவம்”, ஒரு கூனன் உயரத்திலிருந்து சொட்டிக் கொண்டிருந்த தேனைப்பருக ஆசை கொண்டு தனது கூனை நிமிர்த்த முயல்வது என் வாழ்க்கை இலட்சியமே. மனிதனின் கூனிய உள்ளத்தை நிமிர்த்தி தெய்வீக வாழ்க்கையை விரும்புவதுதானே அவளுடைய தனிமையுடன் கலந்து ஒரு அசையாத உள்ளத்தை எடுத்து காண்பிக்கிறது.
அரசனும், அம்மே அந்த மூட்டையில் என்ன இருக்கிறது? கேட்கிறான். குழந்தைக்கு கதை சொல்லி சந்தோசப்படுத்துவது போல மூட்டையிலிருந்த பொருளுக்கு ஒரு கதை கட்ட ஆரம்பித்து விட்டாள்
கூழைப் பலாத்தழைக்கப் பாடக் குறமகளும்,
மூழக் குழக்குதினை தந்தான் சோழாகேள்,
உப்புக்கும் பாடிப் புளிக்கும் ஒரு கவிதை
ஒப்புவிக்கும் என்றன் உளம்
அப்பனே நான் வரும்வழி ஒரு மலைப்பிரதேசம் அங்கே ஒரு குறவனுக்கு இரண்டு மனைவிகள், இளையவளுக்கு தனது கணவனிடம் தன்னை நல்லவளாக காட்ட ஆசை, அதனால் மூத்தாள் மேல் பழி சுமத்த வீட்டு முற்றத்தில் வளர்ந்த அவர்கள் ஜீவிதத்தின் மூலதனமான ஒரு கூழைப்பலாவை வெட்டி விட்டாள். மூத்தவள் தெய்வமே என்று ஏங்கிக் கொண்டு இருக்கும்பொழுது நான் அங்கு சென்றேன். தனது கவலை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு என்னை பசியாற்றினாள். பிறகு நடந்ததை சொன்னாள். நானும் ஒரு பாட்டு பாடினேன். அந்த பலா மறுபடியும் தழைத்துவிட்டது.
அரசனே எனக்கு இந்த ஏழைகளிருக்கிறார்களே அவர்களை பற்றி பாடினால் போதும், தங்களுடைய கஷ்டங்களையும் கவனியாது எனக்கு ஒரு வேளை கூழ் கொடுக்கும் அந்த ஏழைகள் இருக்கிறார்களே அவர்களே எனது கவிதையின் நாயகர்கள் என்று பெருமிதமாக உரைக்கிறாள்
(மீண்டும் அவள் கதை தொடர்கிறது, தன்னுடைய மூட்டையிலிருந்து ஒவ்வொரு பொருளுக்கும் கவிதையை தொடர்ந்து சொல்லிக்கொண்டிருப்பதாக போகிறது)
புதுமைப்பித்தன், “காந்தி 10 ஜூலை 1934.
சுமார் எழுபது வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டை பாக்கள் பாடி வந்த காலம்
ஆண்டான் கவிராயரை அறியாதவர் இருக்க முடியாது. அவர் பாடிய சில ஊர்களை பற்றிய பாக்கள்
திருநெல்வேலி
நாசிப் பொடிக்கு நயக்குமூர், நாள்தோறும்,
வேசிக் கிடங்கொடுக்கும் வேளாணூர் பூசிக்கும்
சைவம் பழுத்த சடங்களுர், கண்பொருளை
செய்வந்த நெல்வேலி சேர்
ஆரல்வாய்மொழி
கன்னி இளம்பருத்தி காய்க்குமூர் கார்காலம்
திண்ணையெல்லாம் மண்மாரி பெய்யுமூர் முன்னர்
முகடர் இருக்குமீர் முப்பந்தற்கு மேலவூர்
மூளி அரண்வாய் மொழி
சுசீந்திரம்
ஒண்டொடிகட் காடவர்கள் ஓடுமூர் உண்மையிலா
மண்டையர்களோ கூடி மறியுமூர் தண்டமிழைக்
கற்றரைப் போற்றாக் கசடமூர் தாணுவெண்போன்
எற்றே இருந்தன்னா மிங்கு
கயிற்றாறு
பாளைமணம் கமழ்கின்ற கயிற்றாற்றுப்
பெருமானே பழிகாராகேள்
வேளை என்றாலிவ்வேளை பதினாறு
நாழிகைக்கு மேலாயிற்றே,
தோளை முறித்ததுமின்றி நம்பி யானையுங்
கூடச் சுமக்கச் செய்தாய்,
நாளையினி யார்சுமப்பார் எந்நாளும்
உன் கோயில் நாசந்தானே !
குறிப்பு கடைசி பாட்டு காளமேகப்புலவர் பாடியதாகவும் சொல்லப்படுகிறது. அது பற்றி விவாதத்தை இங்கு கிளப்பவில்லை. கயிற்றாரில் பெருமாள் கோவில் பாழ்பட்டு கிடப்பதை காண்கிறோம். அதற்கு காரணம் இப்பாட்டுத்தானென்று சொல்லப்படுகின்றது.
இன்னுமொன்று ஆண்டான் கவிராயர் திருநெல்வேலி ஜில்லாலுள்ள ஒரு முஸ்லீமென்று கூறும் ஒரு கட்சியுண்டு.
சொ.வி. ஊழியன் 15, பிப்ரவரி 1935
நமது இலக்கியம்
பாரதியின் கட்டுரைகள்: தத்துவம் பாரதி பிரசுராலயம் திருவல்லிக்கேணி, விலை அணா 10
காளவித்யா பிரகாசினி இரண்டாம் தொகுதி காளவித்யா பிரஸ், ஸ்ரீவைகுண்டம், விலை ரூபா 2-0-0
இரண்டும் முதல் பார்வைக்கு இரண்டு விதமாக சாகா வரம் பெற்ற கவிதை புனைந்த ஒரு கவிஞனின் எழுத்துக்களாகவும், மற்றது பொழுது போக்கையும் சங்கீத வளர்ச்சியை நோக்கமாகவும் கொண்டு இருப்பது போல் தோன்றினாலும் ஊன்றிப்பார்த்தால் இரண்டும் ஒரே ரகந்தான்.
சொ.வி. மணிக்கொடி, 26, மே 1935
மாதர் காடுரைகள் 2 ஸ்ரீ.ஸி.சுப்பிரமனிய பாரதி எழுதியது, பாரதி பிரசாலயம் திருவல்லிக்கேணி சென்னை.
கவிஞன் உணர்ச்சி வசப்பட்டவன், அவன் எழுத்துக்களும் அப்படியே, விதியின் சூழ்ச்சியினால் எழுதிக்குவிப்பதே குறிக்கோளாக இருக்கும் பத்திரிக்கை உலகத்திற்கு வர நேர்ந்தால் அவனுடைய எழுத்துக்களிலும் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுவது அதிசயமல்ல. இந்த விதிக்கு ஸ்ரீ.ஸி.சுப்பிரமணிய பாரதியாரும் விலக்கல்ல.
சொ.விருத்தாசலம், பி.ஏ மணிக்கொடி, 6 செப்டம்பர் 1935
சாந்த சொரூபன் ராஜேந்திர பிரசாத் எம்.எஸ் சுப்பிரமணய அய்யர், விலை அணா-4 அல்லயன்ஸ் கம்பெனி மைலாப்பூர்
சுப்பிரமணிய அய்யரை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த முற்படுத்துவது அதிகப்பிரசங்கித்தனம் ஆகும் சரித்திரத்தின் சலனப்படங்களை மிகுந்த உணர்ச்சி ததும்பும் சித்திரங்களாக பொது மக்களுக்கு எழுதிக்கொடுத்தவர் அய்யரவர்கள், அவர் இந்த சிறு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்.
சொ.விருத்தாசம். பி.ஏ மணிக்கொடி, 10, நவம்பர் 1935
1) தாகூர் சிறுகதைகள் பாரதியார், வ.வெ.சு.அய்யர், மொழிபெயர்ப்பு, பக்கம் 92, விலை அணா.10
2) தகூர் சிறுகதைகள் ஸ்ரீ. ஸ்ரீ.ஆச்சார்யார், மொழிபெயர்ப்பு, பக்கம் 128, விலை அணா.8
3) ஆதிபாண்டியன் பக்கம் 68, விலை அணா.8
4) யுக சாந்தி பக்கம் 48, விலை அணா 4
5) குப்பன் பித்தலாட்டங்கள், பக்கம் 74, விலை அணா 6
6) ஜவஹர்லால் நேரு டி.எஸ் சொக்கலிங்கம், பக்கம் 181, அணா 5 இரண்டாவது பதிப்பு
மாயா பஜார் பட விமர்சனம்
காட்சி அமைப்பு
தம் வசமுள்ள செளகர்யங்களை நன்றாக குற்றமில்லாமல் பயன்படுத்தி உள்ளனர். காட்சிகளில் நம் கவனத்தை கவர்வது துரியோதனன் “துயிலெழும் காட்சி”. அடுத்தபடியாக ‘டிரிக் ஸீன்” அமைப்புகள் குற்றமில்லை, கஜன் வானத்தில் நடப்பது, யுத்தம் புரிவது
வேஷப்பொருத்தம்
கடோத்கஜன்வேஷம் பொருந்திரிருக்கிறது, இதர்ர்களை பொருத்தவரை வேஷம் பொருந்தவில்லை. அபிமன்யூ பாவம் வெகு சாதுப்பிள்ளை, ஸெர்வீஸ் கமிசன் பரீட்சைக்கு சென்றால் ஒரு வேளை பாசாகிவிடுவான்
நடிப்பு சம்பாஷனை
பொதுவாக ஒருவருமே நடிக்க முயற்சிக்கவில்லை. கோபத்தை காண்பிக்க வேண்டுமானால் ”கசடதபற” வார்த்தை ஒன்றை அள்ளி வீசி பாட்டு ஒன்றை பாடிவிட்டால் போதும் என்று நினைக்கிறார்கள்.
சொ.வி. தினமணி 8, ஜனவரி 1937
7) நல்லுரைக் கோவை முதல் இரண்டு பாகங்கள் டாக்டர்.உ.வெ.சுவாமிநாதய்யரவர்கள்
விலை பாகம் ஒன்று அணா 12
8) கமலாம்பாள் சரித்திரம், பி.ஆர்.ராஜமய்யர், பக்கம் 328 விலை ரூ.1-8-0
9) தாஜ்மஹால் அல்ஹாஜ் பா.தாவுத் ஷா.பி.ஏ, பக்கம் 111, விலை 6 அணா
10) ரமணி பி.ஏ, ஸ்ரீ.எம் ராமநாதன், பக்க, 75, விலை 6 அணா
11) இந்துபலா கே.குப்புசாமி அய்யர், பக்கம் 49, விற்பனைக்கல்ல
12) மாதர் மறுமணப்பாடல் திரட்டு பக்கம் 60, விலை 2 அணா
13) உபதேச சாரம், ஆங்க்ல பிரசுரம் மொழிபெயர்ப்பு ஸ்ரீ.பி.வி.நரசிம்மஸ்வாமி பக்கம் 59, விலை 4 அணா
14) ஆரோக்கியமும் தீர்க்காயுளும் எம்.கே பாண்டுரங்கம் பக்கம் 75, விலை 4 அணா
15) உடல் பயிற்சி
16) முதற் பாடம் பக்கம் 112, விலை குறிப்பிடவில்லை, பெண்கள் உடற்பயிற்சி லெ.சோமசுந்தரம், முதற்பாடம் பக்கம் 80, விலை 8 அணா
17) ராஜாஜி குட்டிக்கதைகள், பக்கம் 213, விலை அணா 2
18) சங்கு கணேசன் மலிவு பிரசுரங்கள் (5 புத்தகங்கள்)
19) கண்ணன் என் கவி பக்கம் 144, விலை 6 அணா
20) நீதி நூல்கள் பத்து, ஆங்கிலம் தமிழ் மொழிபெயர்ப்பு ஸ்ரீ.டி. கிருஷ்ணசாமி எம்.ஏ பி.எல்
21) தேய்ந்த கனவு சார்லஸ் டிக்கன்ஸ் மொழி பெயப்பு. கி.ரா. பக்கம் 246 விலை அணா 8
22) நீதி விநோதக்கதைகள் ஸ்ரீ.டி.கே.ராமபத்திர சர்மா பக்கம் 155, விலை 6 அணா
23) சர்.ஸி.வி.இராமன், எஸிராமச்சந்திரன், பி.ஏ, பக்கம் 138 விலை 12 அணா
24) பிரதம மந்திரியின் குறள் மொழிபெயர்ப்பு ஆங்கிலம் ஸ்ரீ.சகரவர்த்தி இராஜகோபாலாச்சர்யார், பக்கம் 145, விலை ர்ர் 1
25) அருமலர் கொத்து தொகுபாசிரியர் கோவை சி.கு,நாராயணசாமி முதலியார்
பக்கம் 84, விலை 6 அணா
26) வழி காட்டும் வான் பொருள் இராமலிங்க முதலியார் பி.ஏ, பக்கம் 293, விலை 2-4-0
27) பகவான் அரவிந்தர் பத்தினியாருக்கு எழுதிய முதல் கடிதம் மொழி பெயர்ப்பு பரலி..சு.நெல்லையப்ப பிள்ளை பக்கம் 23, விலை 2 அணா
28) டால்ஸ்டாய் கதைகள் மொழி பெயர்ப்பு எம்.எஸ்.சுப்பிரமணியம், பக்கம் 83, விலை 6 அணா
29) ஹோமியோபதி எம்.பால்.எச்.எம்.பி பக்கம் 46, விலை 1.1/4
30) பயோகெமிஸ்ற்றி டாக்டர் கொண்டா எம்.டி.எச்.எஸ். பக்கம் 219, விலை ரூ 2
31) பத்திரிக்கைகள் : கலைமகள் தை இதழ்
32) நியூ ஹெல்த்
33) கட்டை வண்டி கே.ஸ்வாமிநாதன் பக்கம் 59, விலை 8 அணா
34) கங்கை கொண்ட சோழன் தி.நா.சுப்பிரமணியன் பக்கம் 148, விலை 1-4-0
35) இந்திய கைத்தொழில் அபிவிருத்து தெய்வசிகாமணி ஆச்சார்யார், பக்கம் 100, விலை 8 அணா
36) குயத்தொழில் ஆங்கில பிரசுரம், ஆர்.வி.லஷ்மிதரன்
37) இஸ்லாம் மதத்தின் ஸ்தானம் தி ஹிஸ்டாரிகல் ரோல் ஆப் இஸ்லாம்
பக்கம் 106, விலை ரூ.1-8-0
38) தமிழ் நேசன் விசேஷ மலர் 1937 பக்கம் 52, விலை 20 சென்ட்
39) தமிழ்-இங்கிலீஷ் காலண்டர் ஸ்ரீ.வி. ராமசாமி அய்யர், பக்கம் 233, விலை 1-8-0
40) சுபாஷ் போஸ், டி.எஸ்.சொக்கலிங்கம் பக்கம் 101 விலை 4 அணா
41) சுபாஷ் போஸ் கே. ராமநாதன் பக்கம் 87, விலை 4 அணா
42) பண்டித ஜவஜர்லால் நேரு கே.ஜி.ராஜூ, பக்கம் 55, 4 அணா
43) தேசபந்து சித்தரஞ்சன் தாஸ், ஆர் சேதுராம், பக்கம் 48, விலை அணா 3
44) கடன் நிவாரண நூலகள் இந்திய விவசாய்களின் கடன் விலை அணா 8
கடன் நிவாரண சட்டமும் அதை பற்றிய முழுவிவரங்களும் விலை அணா 12
அயல் நாடுகளில் கடன் ஒழிப்பு விலை அணா 12
45) கடன்காரார்களுக்கு பாதுகாப்பும் நிவாரணமும். ஸ்ரீ.கே.வி.ராமசுப்பிரமணியம்.பி.ஏ.பி.எல்
விலை ரூ. 3
46) ராஜலெஷ்மி அல்லது சுதேசி ராணி ஸ்ரீ.ஸஆர்.வி.சுப்பிரமணியன் பக்கம் 44 அணா 2
47) மைக்கேல் காலின்ஸ், ஸ்ரீ.பி.ராமசாமி விலை 8 அணா
48) திருமுருகாற்றுப்படை ஸ்ரீ.ந.சே.ராமச்சந்திரய்யர், பி.ஏ. எல்.டி, பக்கம் 33, விலை அணா 4
49) இராஜாஜி சரிதம் ஸ்ரீ. நாராயண துரைக்கண்ணன், பக்கம் 100, விலை அணா 6
50) காதலின் வெற்றி ம்.கி.திருவேங்கடம், பக்கம் 86, விலை 3 அணா
51) கிராமச்சீர்த்திருத்தன் ஸ்ரீ. முத்திய்யா எம்.ஏ, பக்கம் 186, விலை ரூ 1
52) இந்திராணி ஸ்ரீ.எம்.டி.என்.சிவன் ஸ்ரீ.டி.வேலன் பக்கம் 66 விலை அணா 4
53) காதலா கடமையா? சித்தி ஜூனைதா பி.எம் பக்கம் 124, விலை 6 அணா.
54) ஜனாப் முகமதலி ஜின்னா எல்.எம்.ஜி பக்கம் 48, விலை 6 அணா
55) தமிழில் சத்தியமா? தமிழில் முடியுமா? ஸ்ரீ.சக்ரவர்த்தி இராஜகோபாலாச்சார்யார்பக்கம் 83, விலை 8 அணா
56) உடலுறுதி ஸ்ரீ.சுத்தான்ந்த பாரதியார் பக்கம் 122, விலை ரூ 1
57) எல்லோரும் ஓர் குலம் ஸ்ரீ.ப். ராமசாமி பக்கம் 240, விலை அணா 8
58) மது விலக்கு மொழ்பெயர்ப்பு ஸ்ரீ.வதஸன் பக்கம் 162, விலை 6 அணா
59) ஸ்கிரிப்ட் பிராப்ளம் ஸ்ரீ.என்.ஆர்.சுப்ரமண்யன் விலை 1 அணா
60) புதுமையும் பழமையும் ஸ்வாமி சுத்தான்ந்த பாரதியார் பக்கம் 112, விலை 8 அணா
61) மறந்தது ஸ்ரீ. எஸ்.கணபதியப்ப பிள்ளை பக்கம் 39, விலை 3 அணா
62) மாளவிகாக்னிமித்ரம் ஸ்ரீ. எஸ்.எஸ்.தேசிகன், பக்கம் 113, விலை 12 அணா
63) மனிதன் ஸ்ரீ.எம். நாகசுப்ரமணிய பிள்ளை பக்கம் 54, விலை 8 அணா
மேற்கண்ட அனைத்து புத்தகங்களுக்கும் விமர்சனங்களை இப்புத்தகத்தில் பதித்து வைத்திருக்கிறார்.
நீல மாளிகை : கா.ஸ்ரீ.ஸ்ரீயின் இக்கதைக்கு அணிந்துரை:
பதினாறு கதைகளைக் கோவை செய்து உங்கள் பார்வைக்கு விடுகிறார். வாசித்து பார்ப்பதுதானே? எனக்கு அவை யாவும் பிடித்தன. நடை சாதாரணமாக ஹிந்தி முதலிய பிற பாஷை மொழி பெயர்ப்பில் ஈடுபடும் தமிழ் எழுத்தாளர்களிடன் காணுவது போல் அல்லாமல் சரளமாக வாய்த்திருப்பது அருமையான காரியமாகும்
இன்னும் இந்த புத்தகத்தில் அவரின் நிறைய கட்டுரைகள், விவாதங்கள், கடிதங்கள் நிறைய உள்ளன. இலக்கிய ஆர்வம் கொண்டுள்ள வாசகர்கள் கட்டாயம் படிக்க (இருக்க) வேண்டிய நூல் இது

புதுமைப்பித்தன் சென்னை 1 நவம்பர் 1946.
அடுத்தது கடிதங்கள் அன்றைய காலகட்டத்தில் திரைப்பட பிலிம் கச்சாப்பொருள் பற்றாக்குறையால் சினிமா தயாரிப்பாளர்கள் அரசு மீது குறைபட்டு கொண்ட பொழுது இவரின் கடிதங்களும், அதற்கு திரைப்படத்தை சார்ந்தவர்களின் பதில் கடிதங்களும்

வாசகர்களின் பார்வைக்கு இந்த புத்தகம் கிடைக்குமிடம்
அன்னை இட்ட தீ புதுமைபித்தனின் அச்சிடப்படாத/தொகுக்கப்படாத படைப்புக்கள்.
பதிப்பாசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபது பதிப்புரிமை: திருமதி தினகரி சொக்கலிங்கம்.
வெளியீடு காலச்சுவடு பதிப்பகம், 151, கே.பி.சாலை, நாகர் கோவில் 629 001
(பல்லாண்டுகள் பல ஆர்வலர்களின் உழைப்பினால் உருவாகியிருக்கும் அரிய கருவூலம் இது)
இன்னும் நிறைய இருக்கின்றன. போதும் இத்துடன் முடித்து அடுத்த அரட்டையில் சந்திக்கலாம்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (8-Feb-19, 10:57 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 204

சிறந்த கட்டுரைகள்

மேலே