ஓடையில் ஓர் பிம்பம்

ஓடையில் ஓர் பிம்பம்
==================================================ருத்ரா

ஓடையில் முகம் பார்த்தேன்.
என்ன ஆச்சரியம்!
என் பிம்பத்தில் அவள் பிம்பமா?
எனக்கு நான் கேட்டுக்கொண்டதில்
அவளுக்கும் கேட்டு விட்டது போலும்.
என் பிம்பம் தான்.
ஆனால் அது உன் பிம்பத்தில் அல்ல‌
அதோ தெரிகிறது பார்
முழுநிலவு.
அதன் பிம்பம்.
ஆனால்
அந்த வானத்து வட்டக்கண்ணாடியில்
இப்போது தான்
என் முகம் பார்த்தேன்.
என்னைச்சீண்டுவது அவளுக்கு இன்பம்.
அதுவே எனக்கு பேரின்பம்!

=====================================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (9-Feb-19, 10:33 am)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : odaiil or pimbam
பார்வை : 69

மேலே