நூல் நோக்கு நித்தம் ஒரு மந்திரம்

பத்தாம் திருமுறையான திருமந்திரம், தமிழ் மெய்யியலின் முதன்மை நூல்களில் ஒன்று. அன்பே சிவம், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று திருமூலரின் மந்திரங்கள் இன்னும் நம்மை வழிநடத்திக்கொண்டிருக்கின்றன. மெய்யியலோடு வாழ்வியல் நெறிகளையும் அன்றைய நாளின் மருத்துவம், வானியல் கருத்துகளையும் போதிக்கும் திருமந்திரம், 3000 மந்திரங்களைக் கொண்டது. ஒவ்வொரு நாளும் ஒரு மந்திரத்தைப் படித்து பயனடையும்வகையில் 365 மந்திரங்களைத் தேர்ந்தெடுத்து தொகுத்து எளிய உரையையும் அளித்துள்ளார் திலகவதி.

தினம் ஒரு திருமந்திரம்

தொகுப்பு: திலகவதி

அட்சரா பதிப்பகம் சென்னை.

விலை: ரூ.200

94440 70000

எழுதியவர் : (11-Feb-19, 11:35 am)
பார்வை : 25

மேலே