கணிக்கும் நிலையை விட

அமைதியான அடிமையோ நான்
அளவில்லாமல் சோதிக்கிறாயே
இதமான உணவு என்றாலும்
எல்லை மீறி உண்டால் எதிர்வினையாய்

எல்லாவற்றிற்கும் எல்லை உண்டே
எனக்கு நீ வைத்திருக்கும் எல்லை என்ன
எட்டடி எட்டி வைத்தால் - அதனின்
இரண்டு மடங்கு சறுக்குவதைப்போல் பிரமை

கணிக்கும் நிலையை விட
நடக்கும் நிகழ்வு நாலுக்கால் பாய்ச்சலில்
கிடக்கட்டும் என்று கிளை வழிச் சென்றால்
கிடைப்பது என்னவோ கீழான சொற்களே

மேற்பார்வையிடும் மேன்மையானவர்களே
தாங்கும் அளவிற்கே நீரை கொதியிடலாம்
தம்மின் தாங்கும் அளவு மிகின்
நீர் ஆவியாகி பானை மட்டுமே மிஞ்சும்.
__ நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (11-Feb-19, 3:02 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 78

மேலே