காதல்

கன்னங்களா இவை
இல்லை இல்லை
மாங்கனிகளாய் அல்லவோ
காண்கின்றேன் பெண்ணே
என்றாய் என்னைக் கட்டி
அணைத்தாய் முத்தம் தந்தாய்
அன்று உந்தன் ஆருயிர்க்கு காதலி நான்
நீ இட்ட முத்தத்தின் பச்சைமணம்
என்னுள்ளத்தில் இறங்கியது அன்றே-இன்று
நீ என்னை விட்டு விட்டு போன போதிலும்
நீ தந்த முத்தங்கள்
நீயாய் மணம்பரப்பி என்னுள்ளத்தில்.........
நீ என்னை மறந்தபோதிலும் நான்
உன்னை மறந்தேன் இல்லை என்னவா.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (11-Feb-19, 5:35 pm)
Tanglish : kaadhal
பார்வை : 329

மேலே