உத்தரவு

சிந்தனை செல்வன் பெயரை மூன்று முறை அழைத்தார் நீதி மன்ற டவாலி.
நீதிபதி அவனை ஏறிட்டு பார்க்க தலைவணங்கி நின்றான் சிந்தனை செல்வன்.
நீங்கள் இது வரை ஐந்து பொதுநல வழக்கு போட்டு இருக்கீங்க.
ஆமாம் யுவார் ஆனர் என்றார் பொதுநல வழக்கறிஞர் சிந்தனை செல்வன்.
நான்கு வழக்கு விசாரணை முடிந்தது தீர்ப்பு வழங்கியுள்ளது இந்த வழக்குமன்றம்.
எஸ் யுவாரானர்.
அந்த தீர்ப்புகள் நாட்டில் நடைமுறையில் உள்ளதா?
இல்லை யுவாரானர்.
என்ன து நடைமுறை யில் இல்லையா? அப்படி யானால் ஏன் மீண்டும் மீண்டும் பொது நல வழக்கு போடுகிறீகள்?
யவாரானர். இன்றய சூழலில் நீதி மன்றங்களைத்தான் மக்கள் நம்பி இருக்கிறார்கள். நாட்டில் நடக்கும் அத்துமீறல்கள் மக்களுக்கு தெரியவேண்டுமானால் அது நீதிமன்றம் மூலமாகத்தான் தெரிகிறது.அதுமட்டுமின்றி யவாரானர் நீதி மன்ற உத்தரவு களும் அமல்படுத்த படுவதில்லை என்பதை மக்கள் தெரிந்து கொள்கிறார்கள்.
மிஸ்டர் சிந்தனை செல்வன் இது வரை இந்த நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு களில் எவையெல்லாம் அமல்படுத்த படவில்லை என்பதை இன்னும் இரண்டு வாரத்தில் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.
இரண்டு வாரம் முடிந்து பொது நல வழக்கை எடுத்தார் நீதிபதி.
எங்கே வழக்கறிஞர் சிந்தனை செல்வன். நீதிபதி கேட்டார்.
அவரிடம் ஒரு.செய்தி பத்திரிகை யின் இரண்டாம் பக்கம் மடித்து கொடுக்க ப்பட்டது.
நாட்டில் நடக்கும் அத்துமீறள்களை சரி செய்ய வேண்டும் என்று பொதுநல வழக்கு போட்டு வந்த வழக்கறிஞர் சிந்தனை செல்வன் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
இந்த விபத்து திட்டமிட்டசெயலா?என மக்கள் மத்தியில் ஒரு சந்தேகம் நிலவுகிறது.
படித்து நிமிர்ந்த நீதிபதி. இந்த விபத்தை. நீதி மன்றமேவழக்காக எடுத்து க்கொள்கிறதுஎன்று சொல்லி எழந்து சென்றார்.

எழுதியவர் : (12-Feb-19, 2:03 pm)
சேர்த்தது : ராமஜோதி சு
Tanglish : utharavu
பார்வை : 135
மேலே