கல்பற்றா நாராயணன்--------------படித்ததில் பிடித்தது

மலையாள மொழியின் முக்கியமான நவீன கவிஞர் கல்பற்றா நாரயணன் ஆவார். 1939ல் கேரளத்தில் கல்பற்றாவில் பிறந்தார். தபால் ஊழியராக இருந்தவர் மலையாளம் கற்று சிறப்புத்தேர்ச்சி பெற்று கல்லூரி ஆசிரியராக ஆனார். கோழிக்கோடு பல்கலைக் கழகத்தில் மலையாளப் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றார்.
நெடுங்காலம் கல்பற்றா நாராயணன் விமர்சகராகவே அறியப்பட்டார். அழகிய சொற்றொடர்களில் கவிதைபற்றிய விமர்சனங்களை எழுதிவந்தார். பின்னர் 1985 ல் ஒழிஞ்ஞ விருட்ச சாயையில் என்ற தலைப்பில் வைத்ய சாஸ்திரம் என்ற நூலில் கவித்துவ சிந்தனைகளை எழுதினார். அவை கவிதைகள் என்று அங்கீகரிக்கப்பட்டன. அதன்பின்னரே கவிஞராக ஆனார்

நகைச்சுவையும் தத்துவஞானமும் முயங்கும் மென்மையான கவிதைகளை கல்பற்றா நாராயணன் எழுதியிருக்கிறார். நான்கு கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன. கோந்தலா என்ற சுயசரிதை வெளியாகியிருக்கிறது. தமிழில் இவரது கவிதைகள் சிலவற்றை எழுத்தாளர் ஜெயமோகன் மொழியாக்கம் செய்திருக்கிறார்.[1][2]

கல்பற்றா நாராயணனின் முதல் மலையாள நாவலான இத்ர மாத்ரம் திரைப்படமாகவும் வெளிவந்தது. அதை கெ.வி.ஜெயஸ்ரீ ‘சுமித்ரா’ என்றபேரில் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார். வம்சி புத்தகநிலையம் திருவண்ணாமலை வெளியீடு

---------------------

என்றாவது வெகுதூரப் பயணத்துக்குப் பிறகு வீடு திரும்பும் நேரம் ஏதோவொரு நாளின் குளிரடங்காத அதிகாலையாகவே இருக்கிறது. கதவைத் திறந்த அம்மா கைப்பையை வாங்கியதும் இளைத்துப் போனாயே என்று கைகளைப் பிடித்துக் கொள்கிறாள். காய்சலோ வேறு தொந்தரவோ என்று நெற்றியையும் கன்னத்தையும் தொட்டுப் பார்க்கிறாள். குளிரில் நடுங்கும் உடலில் மேலும் அவள் தொடுகை சில்லிடுகிறது.

அப்படித்தான் கவிஞர் கல்பற்றா நாராயணனின் சொற்கள். அவர் தன் கவிதைகளைச் சொல்வதோ தன் நிலத்துக்கே உரிய குளிராக. இரவில் மலையேற்றமும் காணத்தோன்றாத உறக்கத்தில் வயநாடு வரும்போதும் தொட்டுப் பார்க்கும் நான் எப்போதும் உணர்ந்திருந்த குளிரையே தன் நிலத்தின் அடையாளமாகச் சொல்கிறார். அந்நிலத்திலிருந்து கிளைத்து வளர்ந்த பெருமரத்தின் விதையும் மலரும் அச்சொற்கள். அவர் அப்படித்தானே எழுதமுடியும்.

நாகபிரகாஷ்
--------------

கேரளத்தில் வழங்கப்படும் முக்கியமான இலக்கிய விருதான ‘பத்மபிரபா விருது’ மலையாளக் கவிஞரும் விமர்சகரும் பேச்சாளருமான கல்பற்றா நாராயணனுக்கு வழங்கப்படுகிறது. மலையாள நாளிதழான மாத்ருபூமியின் உரிமையாளர்களில் ஒருவரான எம்.பி.வீரேந்திரகுமார் தன் தந்தை பத்மநாப கௌடரின் நினைவாக இவ்விருதை அளிக்கிறார். 1996 முதல் தொடர்ச்சியாக இந்த விருது வழங்கப்பட்டுவருகிறது.

எழுதியவர் : (12-Feb-19, 4:54 pm)
பார்வை : 222

சிறந்த கட்டுரைகள்

மேலே