பரலோக பரோட்டா

1930 களில் தான் பரோட்டா தயாரிக்கப் பயன்படும் மைதா மாவு அமெரிக்காவிலிருந்து அறிமுகமானது. அங்கு மைதாவின் பெயர் பேஸ்ட்ரி பவுடர் அதாவது பசை மாவு. நீண்ட காலமாக பசைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.
இரண்டாம் உலகப்போரின் போது ஏற்பட்ட கோதுமைத் தட்டுப்பாட்டால், மைதா மாவு உலகம் முழுவதும் பரவத் துவங்கியது. பசை பயன்பாட்டிலிருந்து மெல்ல மெல்ல உணவுப் பொருளாக மாறிய மைதா, கோதுமைத் தவிடு மற்றும் முளை ஆகியவை பிரிக்கப்பட்டு மாவாக்கப்படுவது தான். இது மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த மைதாவில் நார்ச் சத்து இல்லாததால் மலத்தை கெட்டிப்படுத்தும் மற்றும் செரிமானத்துக்கு பிரச்சனையாக இருக்கும். அதிக அளவு கார்போஹைட்ரேட் ( 100 கிராம் 25% ) இருப்பதால் உடலுக்கு நல்ல சக்தியை கொடுக்கும், புரதம் ஒரளவு இருக்கிறது மற்றும் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், தைமின், ரிபோஃப்ளோவின், போட்டாசியம், மெக்னிஷியம், தாமிரம் ஆகியவை மிகவும் குறைவாகவே இருக்கின்றன. எனவே இதனுடன் ரவை மற்றும் கோதுமை மாவு போன்றவற்றைச் சேர்ந்து உண்ணுவது நல்லது ஆனால் குறைந்த அளவு மட்டுமே சாப்பிட வேண்டும்.
இந்த மஞ்சள் நிற மைதாவை வெண்மையாக மாற்றுவதற்காக அதில் பென்சாயில் பெராக்சைடு ( BENZORI PER OXIDE ) கலக்கப்படுகிறது.
பென்சாயில் பெராக்சைடு என்றால் என்ன? இது தலைமுடிக்கு அடிக்கும் டையில் பயன்பாடும் ரசாயனம் மற்றும் கழிவறைகளைச் சுத்தம் செய்ய பயன்பாடும் பினாயில் மற்றும் பீளிச்சிங் பவுடர்களில் பயன்பாடுகிறது. இந்த ராசாயினம் மாவில் உள்ள புரதம் உடன் சேரந்து நீர்ழிவுக்க காரணியாய் அமைகிறது.
கோதுமை கெட்டியான மாவாக இருக்கிறது. அதிலிருந்து தயாரிக்கப்படும் மைதாவும் கெட்டியாக தான் இருக்கும். கெட்டியாக இருக்கும் மைதாவை மெனமையானதாக மாற்ற அலாக்சான் ( ALLOXAN ) என்ற ரசாயனம் பயன்படுகிறது.
அலாக்சான் என்றால் என்ன? ஆங்கில மருந்துவத்தில் ஒரு நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமானால் விலங்குகளுக்கு அந்நோயை வரவழைத்து, பின்பு மருந்து கொடுத்து பரிசோதிப்பார்கள். இந்த ஆய்வுக்கூடங்களில் எலிகளுக்கு சர்க்கரை நோயை வரவழைப்பதற்காக ஒரு ரசாயனத்தைப் பயன்படுத்துகிறார்கள். அந்த ரசாயனம் எலிகளின் கணையத்தில் உள்ள இன்சுலின் சுரக்கும் செல்களை ( β CELLS ) அழித்து விடுகிறது. இவ்வாறு அவற்றுக்கு நோயை வரவழைத்துவிட்டு. சர்க்கரை நோய்க்கு மருந்து கண்டுபிடீக்கும் ஆய்வு செய்யப்படுகிறது சக்கரை நோயை எலிகளுக்கு வரவழைக்கும் ரசாயனத்தின் பெயர்தான் அலாக்சான். “உடலில் இன்சுலின் சுரக்கவில்லை அல்லது குறைவாகச் சுரக்கிறது என்பது சக்கரை நோய்க்குக் காரணம் என்று நமக்குத் தெரியும் ஆனால் இந்த இன்சுலின் ஏன் குறைந்து போகிறது? இது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை”
மைதா நீண்ட நாட்கள் பூஞ்சை பிடிக்காமல் பாதுகாப்பாக இருக்க டேஸ்ட் மேக்கரிங் என்ற ரசயானம் சேர்க்கப்படுகிறது.
மைதாவில் செய்யும் பரோட்டா வுக்கு சுவை கூட்ட மோனோ சோடியம் குளுட்டோ மேட் (அஜீனா மோட்டோ) சேர்க்கப்படுகிறது. இது முளைத்திசுக்கள் இறக்கவும் பல்வேறு வகை நோய்களை அதிகப்படுத்தவும் காரணமாகளம் மற்றும் சுவைக்காவும் மணத்திற்காகவும் டால்டா சேர்க்கப்படுகிறது இது இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் உட்புறம் கொழுப்பாக படியும் பின் ஹார்ட் அட்டாக் ஏற்பட வழிவகுத்து விடுகிறது.
பரேட்டாவுடன் வைக்கப்படும் சேர்வா ( சால்னா ) வுக்கு பயன்படும் கோழி பிராய்லர் கோழி ஆகும். குறிப்பிட்ட நாட்கள் ( 44 முதல் 55 ) மட்டும் உயிர் வாழும் தன்மை கொண்டதுதான் பிராய்லர் கோழிகள். அமெரிக்காவின் பீட்டர்ஸ்பர்க்கில் அமைத்துள்ள DUQUESNE பல்கலைக்கழக ஆய்வுகள் பிராய்லர் கோழியின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படும் ரோக்ஸார் ஜோன் என்ற ஹார்மோன் ஊசிகள் மனிதன்களுக்கு புற்று நோயை உருவாக்கும் தன்மை வாய்ந்தவை என்று கூறுகின்றன். அதில் 100 கிராம் பிராய்லரில் கோழியில் 23 கிராம் கொழுப்பும் மற்றும் 16 கிராம் புரதம் மட்டும் தான் இருக்கும். பிராய்லர் கோழியை உணவாக உட்கொள்ளும் இந்தியர்களில் நூற்றில் 65 பேருக்கு கல்லீரல் வீக்க நோய் இருப்பதாக மருத்துவ ஆய்வுக் குழு தெரிவித்துள்ளனர்.
உடலில் சர்க்கரையை கூட்டும், இருதயக் கோளாறு, கிட்னி பேயிலியர், புற்று நோய், செரிமான கோளாறு, உடல் எடை கூடுதல், மூளைத்திசுக்கள் இறக்கும். இதில் சத்துகள் எதுவும் இல்லை குழுந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது.
நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டவுக்கு தடை விதித்துள்ளது. இது போன்ற உணவுப் பொருள் உற்பத்தியை அனுமதிக்கக் கூடாது.
இப்போதாவது நாமும் விழித்து கொள்வோம் நம் தலைமுறை காப்போம்!

J.P. தக்சணாமூர்த்தி

எழுதியவர் : (12-Feb-19, 10:51 pm)
பார்வை : 50

சிறந்த கட்டுரைகள்

மேலே