நரகவேதனைகள் உணர்ந்தேன் உன்னால் 555

பெண்ணே...


சிறுவயது முதல்

கேள்விப்பட்டு இருக்கிறேன்...


பெரியோர்கள் சொல்லி...


பாவங்களும்

தவறுகளும் செய்தால்...


இறந்த பிறகு நரகம் என்றும்

நன்மை செய்தால் சொர்க்கம் என்று...


சொல்லி கேட்டு
இருக்கிறேன்...


வாழும் போதே
நரகம்
என்ன வென்று...


நீ என்னைவிட்டு நகர்ந்த
போதுதான்
உணர்ந்தேன் நான்...


நரகத்தின் வேதனைகள்

எப்படி இருக்கும் என்று...


வாழும்போதே நரகத்தின்
வேதனைகள்
நான் உணர்கிறேன்...


நீயாவது சொர்க்கத்தின்

இன்பங்களை அனுபவித்துக்கொள்...


என்னுயிரே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (13-Feb-19, 8:23 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 730

மேலே