சவைநடுவே நீட்டோலை வாசியா நின்றான் நல்மரம் – மூதுரை 13

நேரிசை வெண்பா

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் - சவைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவன்நல் மரம். 13 - மூதுரை

பொருளுரை:

கிளைகளை உடையனவாகவும், கிளையின் கொம்புகளை உடையனவாகவும் காட்டினுள்ளே நிற்கும் அந்த மரங்கள் நல்ல மரங்களாக ஆகாது.

கற்றோர் சபையின் நடுவே கற்றவர் ஒருவர் கொடுத்த ஓலையைப் படிக்க மாட்டாமல் நின்றவனும், பிறர் குறிப்பை அறியமாட்டாதவனுமே நல்ல மரங்களாகும்.

கல்வியில்லாதவனும், ஒருவருடைய குறிப்பை அறியாதவனும், ஆறறிவுடைய மனிதராய்ப் பிறந்தாராயினும் ஓரறிவுடைய மரத்தினுங் கடையாவர்;

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Feb-19, 8:27 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 1185

சிறந்த கட்டுரைகள்

மேலே