காதல் என்பது யாதனில்

காதலர்கள் தினம் 🌹🌹🌹🌹🌹🌹🌹

காதல் என்பது யாதனில்....🌹🌹
----------
இரு மனங்களில் ஏற்படும்
ஓர் இன்ப அதிர்வு .
இரண்டு மனம் இடம் மாறும்
அற்புத தருணம்
கண்கள் செய்த மாயமா!
காலம் செய்த கோலமா!
எப்போது வந்தது
எப்படி வந்தது
எந்த நிமிடம் வந்தது
எந்த நொடி வந்தது
தெரியவில்லை
வந்து விட்டது
இருக்கமாக அது இருவரையும் பற்றி,தொற்றி கொண்டது.
மீள மனம் இடம் தராது
அது விஞ்ஞான உண்மை.
வானில் பறப்பது போல
ஓர் எண்ணம்
தண்ணீரில் நடப்பது போல் ஓர் நினைப்பு சொல்ல தெரியாத இனம் புரியாத ஓர் அதிசிய உணர்வு .
அவனுக்கு அவள் முகமே எங்கும், எதிலும் .
பாவை அவளுக்கும் பார்க்கும் இடமெல்லாம் அவன் உருவமே.
இப்படி இருந்தது இல்லை எப்போதும் .
வித்தியாசமான ஒர் மனோநிலை .
சுகமான தவிப்பு ,
சந்தோஷமான நாட்கள்.
உறவுகள் மீது நாட்டம் இல்லை .
நண்பர்கள் சொல்வது காதில் விழவில்லை .
சாப்பாடு பிடிக்கவில்லை.
உறக்கம் வரவில்லை.
கடல் அலை மிகவும் கவர்ந்தது ,
மலர்கள் மிகவும் மகிழ்ச்சி அளித்தது ,
மழலை மொழியை மனம் மிகவும் கொஞ்சியது,
இசை எந்த நேரமும் ஈர்த்தது .
மனம் லேசானது.
காதல் விஸ்வரூபம் எடுத்தது.
அனைவரையும் நேசித்தது.
கோபம் இடம் தெரியாமல் ஓடிவிட்டது.
தமிழ் மேல் திடிர் ஆர்வம் வந்தது .
ஆர்பரித்து
பாரதியையும், பாரதிதாசனையும்
தேடி, தேடி படித்ததில்
கவிதை அருவியன கொட்டியது,
நதியாய் அது நீண்டது,
தமிழ் 'கடல்' என புரிந்தது.
இரவு வானின் முழு நிலவில் அவனுக்கு அவள் முகம் தெரிந்தது.
குளித்து முடித்து கன்னி அவள் கண்ணாடியில் கானும் போது
அவன் முகம் அதில் பார்த்தாள்.
இளமையின் கவிதை
'காதல்'.
புத்துணர்ச்சி பிறந்தது
எவரெஸ்ட் சிகரம் எளிதில் ஏறிவிடலாம் !
வானத்தையும் எளிதில் தொட்டுவிடலாம் !
கற்பனைக்கு எட்டா காரியங்களையும்
எளிதில் அடைந்துவிடலாம்
மனோதைரியம் வந்தது
இந்த ஜென்மம் எடுத்ததற்கு இறைவனுக்கு மிக்க நன்றி!
காதல் என்ற உணர்வை ஏற்படுதியதற்கு மீண்டும் ஒரு முறை நன்றி.
உண்மையில் காதல் என்பது மகோன்னதனமான சுகானுபவம்.
மானுட அனுபவத்தில் காதல் என்றும் ஆராதனை செய்யும் இடத்தில்.
- பாலு.

எழுதியவர் : பாலு (14-Feb-19, 8:42 am)
சேர்த்தது : balu
பார்வை : 151

மேலே