வரம்

வரம் என்ன வேண்டும் கேள்
என
என் வாழ்வில்
எதிர் வந்து கேட்ட தேவதையே ...

உன் விஷயத்தில்
நான் பெரும் பேராசைக்காரன்..
வரமென நீயே
வரவேண்டும் தேவதையே என்றேன்...

உனக்கில்லாமலா ...
என்று
என்னை மடிசாய்த்து
தலை கோதி
இறுக அணைத்து
இதழ்களில் முத்தமிட்டாய்...
நான்
ஆசீர்வதிக்கப்பட்டவனானேன்..!

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (14-Feb-19, 9:59 am)
சேர்த்தது : வெள்ளூர் ராஜா
Tanglish : varam
பார்வை : 95
மேலே