பேரன்புக்காரி

எத்தனை துன்பம்
எதிர்வந்த போதும்
'விடு பார்த்துக்கலாம்' என்ற
ஒற்றை சொல்லில்
தைரியம் கூட்டும்
தன்னம்பிக்கைக்காரி...!

யாருக்குமே கிட்டாத
உன் உள்ளமெனும் ஒற்றை நெல்லிக்கனியை
'உன் ஒருவனுக்கே' என்று
பரிசளித்து விட்ட பாசக்காரி..!

ஆயிரம் ஆயிரம் வார்த்தைகளை
ஆசையாய் அள்ளிக் கொண்டு வந்து
ஆபரணக்கவிதை செய்த போதும்
'உன்ன ரொம்ப ரொம்ப பிடிக்கும் டா ' என்ற
எளிய சொல்லில்
இதயம் வசீகரிக்கும் பேரன்புக்காரி ..!

இம் மீச்சிறு வாழ்வில்
மீப்பெரு வகு எண்ணாக
இப்பிரிவுக் காலம் வதைத்த போதும்
மீதி வரும் வாழ்வனைத்தும்
நம் நினைவின் விரல் பற்றி
அன்பின் வழி நடப்போம் அம்மு..!

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (14-Feb-19, 10:45 am)
சேர்த்தது : வெள்ளூர் ராஜா
பார்வை : 118

மேலே