திவ்யமான காதல்

மேகங்கள் பொழியும்
மழையில் நனைந்திட விரும்பி
இதழ்கள் திறந்தது
மலர்களின் காதல்

சிங்கார சிணுங்கல்களை
கோர்த்து மாலையாக
அணிந்த வேளையில்
குழந்தையாய் வெட்கப்பட்டது
குமரியின் காதல்

அடிமேல் அடிவைத்து
தட்டான்களை நெருங்கிடும்போது
வேகமாக சிறகடித்தது
தென்றலின் காதல்

கடைக்கண்ணால் பேசிய
கவிதைகளையெல்லாம்
மொழி பெயர்த்து
அந்தி நிலவின் காதல்

உனக்காக என் இதயம்
துடிக்கிறதா இல்லை பறக்கிறதா
என்று நெஞ்சில் கைவைத்து சொல்
என குழைந்தது இளமைக்காதல்

மிக நேர்த்தியாக
பின்னப்பட்ட பின்னலில்
லாவகமாக அமர்ந்திருக்கும்
ஒற்றை ரோஜாவை
சுற்றியது தேன்சிட்டு காதல்

அமைதியாக அணுகினால்
காதலும் குளிர்ந்துபோகும்
என்பதை அழுத்தமான
அணைப்பினால் உணர்த்தியது
வெப்பத்தின் காதல்

எல்லா காதல்களையும்
கொண்டாட மனம்
மறுப்பதேயில்லை எல்லா நாளும்
காதலர்தினம் என்பதால்..........


......................................மேகலை ...............

எழுதியவர் : மேகலை (14-Feb-19, 11:00 am)
சேர்த்தது : மேகலை
Tanglish : intha kaadhal
பார்வை : 134

மேலே