மகிழ்மதி - மகிழன்

பெண்மையிலே
அவள் ஒரு
"பெண் மயில் ".......

அவளை
கண்டவுடன்
கண்டபடி
கனவுகள்
கருவாகுது ...

நின்ற வழி
நின்றபடி
நினைவும்
நிழலாகுது ...

அவள் கூந்தல் சேர்ந்த
ரோஜா ...
வெட்கத்தில்
தலை குனியுது ...

அவள் பாதம் பட்ட
இடமெல்லாம்
பூப்பாதை யாகுது ...

அவள் அழகை
ரசிக்கையில்
சூரியனுக்கும்
கொஞ்சம் வியர்க்குது ...

மேக கூட்டமெல்லாம்
மோகம் கொண்டு
அலையுது ...

அவள் மேல்
பட்டுத்தெரித்த
ஒற்றை துளி
சமுத்திரமாகுது ...

அவள் என்னை
கடந்து சென்ற போதே
என் மனதை
கடத்தியும் சென்றவள் ...

ஒத்திகை பார்த்த
ஓராயிரம் வார்தைகள்
ஓசையின்றி தெரியுது ...

ஒப்பனை செய்ததெல்லாம்
விற்பனையின்றி தீர்ந்தது ...

விரிவுரை யாற்ற
வந்த என்னால்
சிறு குறிப்பு கூட
சொல்ல விடாமல்
அலைக்கழிக்குது அவள்
கண்ணின் கருவிழிகள் ....

எழுதியவர் : குணா (14-Feb-19, 3:58 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 53

மேலே