இதழாசிரியர் பெயரில் இதழ்கள்

புகழ் பெற்ற இதழாளர்கள் தங்கள் பெயரிலேயே இதழ்களைத் தொடங்கி வெற்றி கண்டது தமிழகத்தில்தான். பன்முக எழுத்தாளர் அமரர் கல்கி அவர்கள், ஆனந்த விகடனிலிருந்து விலகியதும் கல்கி என்ற பெயரில் வார இதழைத் தொடங்கி நடத்தினார். கல்கி இதழில் புகழ்பெற்ற பல தொடர்கள் வெளி வந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றன.இன்றும் தமிழ் இதழ் உலகில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
தென்றல், கடிதம் உள்ளிட்ட பல பத்திரிகைகளை தமது திரையுலக மற்றும் அரசியல் பணிகளுக்கு இடையே கவியரசர் கண்ணதாசன் நடத்தி வந்தார். அவரே எழுபதுகளில் கண்ணதாசன் என்ற இலக்கிய இதழைத் தொடங்கி நடத்தி வந்தார். தமிழ் இலக்கிய இதழ்களின் வரலாற்றில் கண்ணதாசன் இலக்கிய இதழ் தனி இடத்தைப் பெற்றுள்ளது. ஆனந்த விகடன், தினமணி கதிர் உள்ளிட்ட நீண்ட நெடிய இதழுலக அனுபவம் மிக்க சாவி, எழுபத்தெட்டாம் ஆண்டு தினமணி கதிரிலிருந்து விலகி குங்குமம் இதழ் தொடங்கப்பட சூத்திரதாரியாக இருந்து அதன் ஆசிரியரானார்.எண்பதாம் ஆண்டு ,குங்குமத்திலிருந்து விலகி சாவி என்ற தமது பெயரிலேயே வார இதழைத் தொடங்கி நடத்தினார். சாவியின் துணைப் பத்திரிகைகள் ஆக விசிட்டர் லென்ஸ்,திசைகள்,மோனா நாவல் இதழ், ரீடர்ஸ் டைஜஸ்ட் போல் பூவாளி டைஜஸ்ட். ஆனந்த விகடன் இதழில் துணை ஆசியராக இருந்த இதயம் பேசுகிறது மணியன், எழுபத்தெட்டாம் ஆண்டு குங்குமம் தொடங்கப்பட்ட அதே தருணத்தில் இதயம் பேசுகிறது இதழைத் தொடங்கி நடத்தினார். சில ஆண்டுகளுக்குப் பின் மணியன் என்ற தமது பெயரில் மாத நாவல் இதழைத் தொடங்கி நடத்தினார்.


-------------------------------------------
மதுரகவி
தமிழ்த்தேனீ

எழுதியவர் : (16-Feb-19, 5:24 am)
பார்வை : 47

மேலே