கண்ணன் பாட்டில் இடம்பெற்ற ஜோதிடன்

பாலத்து சோசியன்

மகா கவி பாரதியின் உயர்ந்த பாட்டுகளில் ஒன்று -கண்ணன் பாட்டு
கண்ணன் பாட்டு குறித்து பல ஆய்வு நூல்கள் வெளி வந்துள்ளன. அவற்றுள் ஒன்று கண்ணன் என் கவி என்ற ஆய்வு நூல். இதனை சிட்டி சுந்தர ராஜன் ,கு.ப.ராஜகோபாலன் ஆகிய இரண்டு முதுபெரும் எழுத்தாளர்கள் இணைந்து எழுதினர்.
கண்ணன் பாட்டு -பத்தாவது பாட்டு கண்ணன் என் காதலன் பாட்டில் பாரதி பாடுகிறான்
“பாலும் கசந்த தடி படுக்கை நொந்த தடி
கோலக் கிளி மொழியும் செவியில் குத்தல் எடுத்ததடி
நாலு வைத்தியரும் இனிமேல் நம்புதற்கில்லை என்றார்
பாலத்துச் சோசியனும் கிரகம் படுத்தும் என்று விட்டான்”
பி.ஸ்ரீ. என்னும் தமிழறிஞர் ,தம்முடைய ‘கொஞ்சமோ நினைவின் வெள்ளம்’ நூலில் கூறுகிறார்
“திருநெல்வேலியில் பாலத்துக்குக் கீழ் ஜோதிடர்கள் இருப்பார்கள். பாலத்து ஜோசியரை நினைவில் கொண்ட பாரதி அந்த சோதிடருக்கு இலக்கிய அந்தஸ்து கொடுத்து இலக்கியத்தில் நிரந்தர இடம் கொடுத்து விட்டார் பாருங்கள்”
கிரகம் கஷ்டப்படுத்தும் என்று தெரிந்து கொள்ள நமக்கு எல்லாம் சோதிடர் வேண்டுமா என்ன? கிரகம் படுத்துவது கஷ்டமாகத் தான் இருந்த து என்றேன் நண்பரிடம். அப்புறம் சரியாகி விட்டதா என்றார் அவர் .பழகி விட்டது கஷ்டம் என்றேன் நான்.




----------------------------------------------------------
மதுரகவி
தமிழ்த்தேனீ

எழுதியவர் : (16-Feb-19, 5:33 am)
பார்வை : 36

சிறந்த கட்டுரைகள்

மேலே