வெற்றி

ஆட்டோகிராப் போட
பேனாவும் வாசகமும்
முடிவாயிற்று

பொதுநிகழ்வில் பேச
சன்மானமும் பேசுபொருளும்
முடிவாயிற்று

செல்பி கொடுக்க
புன்னகையும் கைகுலுக்களும்
முடிவாயிற்று

பொதுவெளியில் செல்ல
பௌன்சர்களும் இன்னோவாக்களும்
முடிவாயிற்று

'ராஜபாட்டை' நேர்காணலுக்கு
தேதியும் பதிலும்
முடிவாயிற்று

விருதுக்கான
கவிதையும் கட்டுரையும்
முடிவாயிற்று

அசையும் அசையா
சொத்திற்கான நாமினிகூட
முடிவாயிற்று

காத்திருப்பது
ஒன்றே ஒன்றிற்காக
மட்டும்தான்

"வெற்றி"

-பாரதிநேசன்
06/02/2019

எழுதியவர் : பாரதிநேசன் (16-Feb-19, 4:58 pm)
சேர்த்தது : பாரதிநேசன்
பார்வை : 190

மேலே